ம்ஹூம்... இவர்கள் எல்லாம் இந்த பழங்களை சாப்பிடவே கூடாது!

Aug 31, 2023,04:33 PM IST
- மீனா

"மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி"

"என்ன இப்போ திடீரென இந்த பாட்டை யூடியூப்ல போட்டு கேட்டு இருக்கீங்க.."

"இல்லம்மா  இந்த பாட்டு உனக்கு ரொம்ப புடிக்கும் இல்ல, கேட்டு ரொம்ப நாளாச்சுல அதனாலதான் போட்டேன்"

"எனக்கு பாட்டு பிடிக்கும்னு போட்டீங்களா இல்ல அந்த பாட்டுல வர மாம்பழம் உங்களுக்கும் பிடிக்கும் அப்படின்னு சொல்றதுக்கு போட்டிங்களா"



"அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லம்மா, இருந்தாலும் மாம்பழம் சாப்பிடணும் போல இருக்கே.. அதான் உன்கிட்ட... கேட்கலாமான்னு..."

"போதும் போதும்  இழுக்காதீங்க, உங்களுக்கு தான் சுகர் இருக்குதுன்னு தெரியும்ல. சுகர் இருக்கிறவங்க மாம்பழ சாப்பிடக்கூடாதுன்னு தெரியாதா". 

"முன்னாடியெல்லாம்  பழங்கள் சாப்பிட்டா ரொம்ப நல்லதுன்னு சொல்லுவங்க. ஆனா இப்ப எந்த பழத்தை எப்ப சாப்பிடணும் , ஏன் சாப்பிடக்கூடாது, எப்படி சாப்பிடணும் எந்த வடிவத்துல சாப்பிடணும்னு ஆயிரம் விஷயங்கள் இருக்கு போலம்மா"

"அட ஆமாங்க. உண்மை தாங்க"

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் உடல் வலிமை அடையவும் பழங்கள் எடுத்துக் கொள்வது முக்கியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.  பொதுவாக பழங்கள் சாப்பிட்டால் நமக்கு  விட்டமின்ஸ், மினரல்ஸ், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் இப்படி ஏகப்பட்ட சத்துக்கள் நமக்கு கிடைக்கும் என்று நாம் எல்லாருக்கும் தெரியும்.  இது எல்லாம் உண்மைதான், ஆனால் இது எல்லாருக்கும் பொருந்துமான்னு கேட்டா அது தான் இல்ல.  நம் உடலில் சில  வியாதிகள் வரும்போதும் சில பழங்களை தவிர்ப்பதனால் அந்த வியாதியை முற்ற விடாமலும் ,வியாதியின் மூலம் வரும் பக்க விளைவுகள்  வராமலும், ஆரோக்கியத்தை மேம்படுத்தி நம்மால் நம்மை பார்த்துக் கொள்ள முடியும். 

முக்கியமா சுகர்  உள்ளவங்க, அல்சர் பிரச்சனை உள்ளவங்க, கருவுற்றிருக்கும் பெண்கள் இவர்கள் எல்லாம் சில பழங்களை தவிர்ப்பது நல்லதாம். அது என்னென்ன பழம் என்று வாங்க பார்க்கலாம்.

சுகர் வியாதி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்:

வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் இந்த மூன்று பழங்களையும்  சுகர் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டுமாம். ஏனென்றால் இதில் இயற்கையாகவே சுக்ரோஸ்  அதிகமாக இருக்கிறது. அதனால் இதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி நாம் இந்த பழங்களை   எடுத்துக் கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடுகிறது.

கருவுற்றிருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்:



பொதுவாக கருவுற்றிருக்கும் சமயத்தில் குழந்தை ஆரோக்கியத்திற்காகவும் தாயின் ஆரோக்கியத்திற்காகவும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அதிகமான பழங்கள் எடுத்துக் கொண்டால் அது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று நாம் எல்லாரும் அறிந்ததே. ஆனால் சில பழங்களையும் தவிர்க்கும் போது நாம் இன்னும் ஆரோக்கியமான சூழ்நிலையை உணரலாம் என்பதும் உண்மைதான். அதனால் அன்னாசிபழம், கிரேப்ஸ், பப்பாளிப்பழம் போன்ற பழங்களையும் தவிர்க்க வேண்டும். இதை உட்கொள்வதினால்  உடலில் அதிகமாக சூட்டை ஏற்படுத்தி அது  கருவிற்கு ஆபத்தாக  கூட முடிந்து விடும்.

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்:

வயிற்று அல்சர் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் எல்லாரும் இந்த பழங்களை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும். அது எந்த பழங்கள் என்றால் எலுமிச்சை, ஆரஞ்சுப்பழம், சாத்துக்குடி மற்றும் கிரேப்ஸ். இந்த பழங்களில் அதிக அளவு சிட்ரஸ் இருப்பதினால் இதை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. நாம் எல்லா பழங்களையும் சாப்பிடுவதை தவிர்த்து நம் உடல் நிலைக்கு எது பாதிப்பை ஏற்படுத்தாதோ அந்த பழங்களையும் சாப்பிட்டு நம் ஆரோக்கியத்தை மேலும் அதிகப்படுத்தலாம். 



இப்போ உங்களுக்கு தெரிந்திருக்குமே. அப்ப சுகர் உள்ளவங்க எந்த பழங்களை தான் சாப்பிடணும் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரியுது. அந்த பழங்களை தான் இப்ப எங்க அப்பாவுக்கு  கட் பண்ணி  கொடுக்கப் போறேன். அதைப் பார்த்தே நீங்களும் தெரிஞ்சுக்கலாம்.. வர்ட்டா!

"ஏம்மா அது என்ன பழம்னு சொல்லிட்டுப் போயேம்மா.."

நாளைக்கு நாளைக்கு!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்