300 படங்களுக்கு மேல் பணியாற்றிய.. ஸ்டண்ட் சில்வா .. இயக்குனராக அவதாரம் எடுத்த கதை..!

Jan 24, 2024,04:17 PM IST

சென்னை: பல மொழிகளில் 300 படங்களுக்கு மேலாக ஸ்டண்ட் இயக்குனராகப் பணியாற்றிய  ஸ்டண்ட் சில்வா தற்போது இந்த வருடம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் தொடர் விடுமுறைகளில் எந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும். அதில் எந்த படங்கள் வெற்றி பெறும் எந்த படங்கள் குறைவான விமர்சனங்கள் பெறும் என்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.




அந்த வரிசையில் இந்த வருடம் பொங்கல் தினத்தை முன்னிட்டு கேப்டன் மில்லர், அயலான், மெர்ரி கிறிஸ்மஸ், ஹனுமான் மற்றும் மிஷன் சாப்டர்1 ஆகிய  படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் மிஷன் சாப்டர் 1 படம் அதிரடி ஆக்சன் கலந்த படமாக வெளிவந்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.


மிஷன் சாப்டர் 1  படத்தின் சண்டைக் காட்சிகளை பார்ப்பதற்கு ஹாலிவுட் படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் போல தோன்றுகிறது.  அந்த அளவிற்கு இப்படத்தில் சண்டைக் காட்சிகள் மிகப் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு படத்திலும் சண்டை காட்சிகள் என்றாலே ஹீரோவுடன் ஒருவர் அல்லது நான்கு பேர் மோதும் படி படமாக்கப்படும் . ஆனால் இப்படத்தில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட் நடிகர்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டை காட்சிகள் படம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.




ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது.. படம் எப்படி இருக்கிறது ..என்று கேட்டால் ..படத்தில் வரும் சண்டை காட்சிகள்..  பின்னிப் பெடல் எடுத்து பிரம்மாண்டமாக உருவாக்கி இருக்கிறார்கள்.. என்று கருத்து சொல்கின்றனர். இப்படத்தில் நாயகியான எமி ஜாக்சன் ஜெயிலர் கதாபாத்திரத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்க நடித்திருக்கிறார்.


ஸ்டண்ட் சில்வா தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த ஸ்டண்ட் இயக்குனர். இவர் தமிழ் மட்டுமில்லாமல்  தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, மற்றும் சிங்களம் என பல மொழிகளில்  300 படங்களுக்கு மேல் ஸ்டண்ட்  இயக்குனராக பணியாற்றியுள்ளார். இது மட்டுமல்லாமல் பல்வேறு படங்களுக்காக பல அரிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சண்டைக் காட்சிகளுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமின்றி பல படங்களின் நடித்து நல்ல ஸ்டண்ட் நடிகர் என ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.




சில வருடங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஸ்டண்ட் சில்வா. இதனை தொடர்ந்து அஜித், அருண் விஜய் நடித்த என்னை அறிந்தால் படத்தின் சண்டை காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு திரையில் வரும் காட்சிகளை சும்மா  அதிர வைத்திருப்பார்.


இந்நிலையில் அருண் விஜய் நடித்து வெளியான மிஷன் சாப்டர்1 திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் சில்வாவுக்கு சினிமாவில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்துள்ளது. பொதுவாக அந்த காலம் முதல் இந்தகாலம் வரை சினிமாவில் வில்லனாக நடிக்கும் எல்லோரும் நிஜத்தில் நல்லவர்கள் தான். அந்த விதத்தில் ஸ்டண்ட் சில்வாவும் இதற்கு விதிவிலக்கல்ல.  பார்ப்பதற்கு நூடுல்ஸ் தலையுடனும், முகத்தில் தழும்பும், கரடு முரடாக காட்சி அளிக்கும் இவரின் மனம் ஒரு குழந்தை போன்றது. இது பார்ப்பவர்களுக்கு தெரியாது. ஆனால் அவருடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.




தமிழில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் சித்திரை செவ்வானம். இது  2022 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி மற்றும் சாய் பல்லவி தங்கை பூஜா நடிப்பில் இப்படம் வெளியானது. இப்படம் மிகப்பெரிய எமோஷனல் கலந்த படமாக உருவாகி இருந்தது. இப்படத்தின் மூலம் சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றும் ,சோசியல் மீடியாவை எப்படி கையாள வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாகவும் எமோஷனல் கலந்தும் சொல்லியிருப்பார்கள். இப்படத்தை இயக்கிய பிறகு பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்ற ஒப்புக்கொண்டதால்  படங்களை இயக்க முடியவில்லை.


இந்நிலையில் பல்வேறு படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த ஸ்டண்ட் சில்வா, இந்த வருடம் பிரம்மாண்டமான சூப்பரான அதிரடி ஆக்சன் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதனால் தமிழ் சினிமாவில் பிசியான இயக்குனராக வலம் வர இருக்கிறார்.


செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைக்கும் இவருக்கு இனி வாழ்வில் எல்லாம் ஏறு முகம் தான்.இவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய படங்களின்  வெற்றியைத் தொடர்ந்து, இவர் புதிதாக இயக்கும் படங்களும்  வெற்றி பெற வாழ்த்துவோம்..!

சமீபத்திய செய்திகள்

news

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க துவங்கியது

news

ரூட்டை மாற்றும் ஃபெஞ்சல்... புயல் கரையை கடப்பதில் தாமதம்... வெதர்மேன் கொடுத்த அப்டேட்

news

சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல்.. இடைவிடாமல் பலத்த மழை பெய்யக் கூடும்.. IMD

news

புயல் முழுமையாக நீங்க டிசம்பர் 5 வரை ஆகும்.. அதுவரை மழை இருக்கும்.. வானிலை ஆர்வலர் செல்வகுமார்

news

ஃபெஞ்சல் புயலால் கன மழை எதிரொலி.. வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால்.. இந்த நம்பரில் கூப்பிடுங்க!

news

Lunch box recipe: வாழைப்பூ அரைத்து விட்ட குழம்பு .. செம டேஸ்ட்டி.. சுப்ரீம் ஹெல்த்தி!

news

ஃபெஞ்சல் புயல் + கன மழை எதிரொலி.. சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்.. தாம்பரத்திலும் பாதிப்பு!

news

அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

சென்னையில் மிக கன மழை.. பறக்கும் ரயில் சேவை முற்றிலும் ரத்து.. புறநகர் மின் ரயில் சேவையும் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்