சென்னை: அமரன் படத்தினால் மனஉளைச்சலுக்கு ஆளான பொறியியல் மாணவர் ரூ.1.1 கோடி நஷ்டஈடு கேட்டு அமரன் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்த கதையாகும். இத்திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆனநிலையில் இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை இப்படம் 300 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில் அமரன் திரைப்படத்தில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஒரு துண்டு சீட்டில் செல்போன் நம்பரை எழுதி தூக்கி வீசுவது போன்ற காட்சி ஒன்று படத்தில் இடம் பெற்றிருக்கும். அந்தக் காட்சியில் செல்போன் எண்ணும் காட்டப்பட்டிருக்கும். நிஜத்தில் அந்த எண் வைத்திருப்பவர் பொறியியல் மாணவர் தான் வாகீசன் தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ளார். அந்த செல்பேன் நம்பருக்கு அடிக்கடி போன் கால் வருவதாகவும்,ரசிகர்கள் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வருவதாகவும் அவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தொடர்ந்து போன் வருவதால், தன்னால் அன்றாட வாழ்க்கையை கூட நிம்மதியாக கடக்க முடியவில்லை என்றும் வாகீசன் தெரிவித்துள்ளார். வெளியில் செல்வதற்கு காரை முன்பதிவு செய்யக்கூட இயலாதவாறு தொடர்ந்து போன் வருவதாகவும், சரியாக படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவுமு் கூறியுள்ளார். மேலும், படக்குழுவினரை குறிப்பிட்டு, ரசிகர்களின் தொந்தரவினால் எனது சொல்போன் எண்ணை மாற்ற முடியாது. ஆதார், வங்கி உள்ளிட்ட சில முக்கியமானவற்றிற்கு இந்த எண் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் தெரியும் எண்ணை மறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதவிர அமரன் படக்குழுவிற்கு ரூ.1 கோடியே 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வாகீசன் தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}