Valentine's day: உங்களோட X-ஐ கடுப்பாக்கணுமா.. காத்திருக்கும் கரப்பான் பூச்சிகள்.. அமெரிக்காவில் கலகல

Feb 04, 2025,07:10 PM IST

நியூயார்க்: காதலர் தினத்தை முன்னிட்டு காதலில் பிரிந்தவர்கள், முன்னாள் காதலன் காதலியை பழிவாங்க நினைப்போர்களுக்கு ஒரு ஆபரை அறிவித்துள்ளது அமெரிக்காவில் உள்ள விலங்கியல் காப்பகம். அதாவது அங்குள்ள கரப்பான் பூச்சிகளுக்கு தங்களுக்குப் பிடிக்காதவர்களின் பெயர்களைச் சூட்டிக் கொள்ளலலாம்.


ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14ஆம் தேதியை காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். காதலர் தினத்திற்கு முன்பு வரும் முதல் வாரமும் காதலர் தின வாரமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கு முதல் வாரமான பிப்ரவரி 7 ஏழாம் தேதி ரோஸ் டேவில் துவங்கி,  பிப்ரவரி 8ஆம் தேதி புரபோசல் டே, பிப்ரவரி 9ஆம் தேதி சாக்லேட் டே, 10ம் தேதி டெட்டி டே, 11ம் தேதி பிராமிஸ் டே,  12ம் தேதி ஹக் டே, 13ம் தேதி முத்த தினம்,  14ம் தேதி காதலர் தினம்.. எனக் கொண்டாடவுள்ளனர் உலகக் காதலர்கள்.




இந்த நாளில் காதலர்கள் தங்கள் துணைகளிடம் அன்பை வெளிப்படுத்தி அவர்களுக்கு பிடித்த சாக்லேட் டெடி போன்ற ஸர்பிரைஸ் கிப்ட்களை கொடுத்தும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த கிஸ் டே, ப்ராமிஸ் டே, ஹக்டே என கொண்டாடி மகிழ்கின்றனர். இப்படி காதலர் தினத்தை கொண்டாடுகிறவர்கள் பலர் உண்டு. காதலிக்கும் எல்லோருமே வாழ்க்கையில் இணையாவதில்லை. சிலர் மட்டுமே காதலில் வெற்றி கண்டு திருமணம் வரை செல்கிறார்கள்.ஆனால் ஒரு சிலரோ காதலில் தோல்வியடைந்து பிரிந்து வாழ்கின்றனர். 


இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பெற்றோர்கள் சம்மதம் கிடைக்காதது, காதலர் காதலியிடம் ஒற்றுமையின்மை உருவாவது, சுய கௌரவம், பொறாமை, வெறுப்பு என பல்வேறு காரணங்களால் பிரிகின்றனர். இன்று பெற்றோர் சம்மதம் என்பதை பெரிய பிரச்சினையாக யாரும் பார்ப்பதில்லை. அதைத் தாண்டி பலருக்கு மனக் கசப்பு அதிகரித்து பிரிவதுதான் பெரிய அளவில் உள்ளது.


காதலர்கள் பிரிந்தால் அவர்களுக்குள் அழுத்தம் அதிகரித்து இதயம் நொறுங்கி போனது போல் உணர்வார்கள்.  பிரிவு ஒரு சிலருக்கு நன்மையையும், பலருக்கு விரத்தியையும் உண்டாக்குகிறது. இதனால் ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பும் அதிகரித்து விடுகிறது. இப்படி முன்னாள் காதலன் காதலின் மீது வெறுப்பு உண்டாகி பழிவாங்க நினைப்போரும் பலர் உண்டு. அப்படிப்பட்டவர்களை ஆக்கப்பூர்வமாக பழிவாங்குங்க என்று பாசிட்டிவான பாதையில் திருப்பி விட்டுள்ளது நியூயார்க்கில் உள்ள பிராங்ஸ் விலங்கியல் பூங்கா. 




அதாவது காதலர் தினத்தை முன்னிட்டு முன்னாள் காதலன் மற்றும் காதலியை பழிவாங்க நினைப்போர் கரப்பான் பூச்சிக்கு அவர்களின் பெயரை சூட்டிக் கொள்ளலாம் என ஒரு வினோதமான அணுகுமுறையை கொண்டு வந்துள்ளது இந்த உயிரியல் பூங்கா. கரப்பான் பூச்சிகளுக்கு பெயர் சூட்ட நினைப்பவர்களிடம் இருந்து ரூபாய் 1,246 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெயர் வைத்தபிறகு பெயர் வைத்ததற்கு சான்றாகவும், காதலர் தின பரிசாகவும் உங்களின் முன்னாள் காதலன் காதலிக்கு ஈமெயில் மூலம் சான்றிதழ் அனுப்பப்படும். பிப்ரவரி 8ஆம் தேதி ஆர்டர் புக் செய்தால் தான் 14ஆம் தேதி சரியாக சென்று சேரும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.


இதை வருடா வருடம் செய்து வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாம். பலரும் பெயர் சூட்ட ஆர்வம் காட்டுவதாக விலங்கியல் பூங்கா கூறியுள்ளது.


அப்புறம் என்ன பாஸ்.. உங்களோட எக்ஸ் பெயரை கரப்பான் பூச்சிக்கு சூட்டி ஜாலியா காதலர் தினத்தை கொண்டாடுங்க!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொடர் உச்சத்தில் தங்கம் விலை... சவரன் 63,000த்தை கடந்து புதிய உச்சம்!

news

சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

news

ஈரோடு கிழக்கு.. படு விறுவிறுப்பாக நடைபெறும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு.. மக்களிடையே ஆர்வம்

news

ட்ரெய்லர் மட்டுமே பார்த்துவிட்டு.. இதுதான் என யூகிக்க வேண்டாம்.. விடாமுயற்சி நடிகை.. ஓபன் டாக்..!

news

ஓம் சரவணபவ.. வாழ்வில் வளம் பெற தை கிருத்திகை விரதம்.. பிப்ரவரி 6.. மறவாதீர்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!

news

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சூழல் மன்றங்கள்.. விரைவில் கொள்கை முடிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

No Uppuma.. பிரியாணியும் சிக்கன் பிரையும் வேணும்.. கலகலக்க வைத்த கேரள சிறுவன்.. அமைச்சர் சொன்ன பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்