டெல்லி: ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ் இணைந்து நடித்துள்ள ஸ்த்ரீ 2 படத்தில் நடிகை தமன்னாவின் அதிரடியான கேமியோ இடம் பெற்றுள்ளதாம். ஜெயிலர் படத்தில் அவர் போட்ட காவாலா டான்ஸையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இது அதிரடியாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
ஷ்ரத்தா கபூர் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள படம்தான் ஸ்த்ரீ 2. அவருக்கு ஜோடியாக ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஒரு சர்ப்பிரைஸ் எலிமென்ட்டை தற்போது சேர்த்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வியாழக்கிழமை வெளியான பிறகு இந்த சர்ப்பிரைஸ் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
காரணம், மில்க்கி ஒயிட் அழகி என்று ரசிகர்களால் சிலாகிக்கப்படும் தமன்னாவின் தலையை டிரெய்லரில் பார்த்ததால் ரசிகர்கள் ஹேப்பியாகி விட்டனர். ஆமாங்க ஆமா.. ஒரு அட்டகாசமான டான்ஸ் போட்டுள்ளாராம் தமன்னா. சும்மா சொல்லக் கூடாது, ரசிகர்களின் இதயங்களை எகிற வைக்கும் அளவுக்கு இந்த டான்ஸ் சூப்பராக இருக்குமாம்.
இப்படத்தில் தமன்னா என்ன ரோலில் வருகிறார்.. வெறும் டான்ஸ் மட்டும்தானா அல்லது முக்கியமான ஏதாவது கதாபாத்திரதம் இருக்கிறதா என்ற விவரத்தை படக் குழு வெளியிடவில்லை. ஆனால் டான்ஸைப் பார்த்தால், ஜெயிலர் படத்தில் வந்த காவாலா டான்ஸையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்தப் பாடல் காட்சியில் தமன்னா அதிரடி காட்டியிருப்பதாக தெரிகிறது.
ஸ்த்ரீ 2 படம் ஹாரர் மற்றும் காமெடி கலந்த படமாகும். ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று திரைக்கு வருகிறது.
மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!
சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!
பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்