இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?

Jan 14, 2025,10:17 AM IST

சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் தங்களை ரசிகர்கள் யாரும் அடைமொழி வைத்து அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு முன்னணி ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தங்களின் சொந்த பெயர்களை வைத்து மட்டும் அழைக்க வேண்டும் என கூறி வருவது தமிழ் சினிமாவில் புதிய டிரெண்டாகி வருகிறது.


இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் இணைவார்களா என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகளுக்கு அடைமொழி வைத்து அழைக்கும் கலாச்சாரம் எம்ஜிஆர், சிவாஜி காலத்திற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறது. தற்போதுள்ள விஜய், அஜித், விஷால் என அனைவருக்கும் இருந்து வருகிறது. தல, தளபதி, புரட்சி தளபதி, இளைய தளபதி உள்ளிட்ட விதம் விதமான பெயர்களால் பலரையும் ரசிகர்கள் அன்பாக அழைத்து வருகிறார்கள். 




இந்த நிலையில் கடந்த ஆண்டு, தன்னை ரசிகர்கள் யாரும் இனி "தல" என அடைமொழி வைத்து அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் கேட்டுக் கொண்டார்.  இந்த அதிரடி அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. என்னை அஜீத் என்றோ அஜீத் குமார் என்றோ அல்லது ஏகே என்றோ அழைத்தால் போதுமானது என்று அஜீத் கூறி விட்டா். அதேபோல தன்னை அஜீத்தே கடவுளே என்று போகும் இடமெல்லாம் கூவிக் கூவி அழைத்த செயலையும் அநாகரீகம் என்று கண்டித்து அதற்கும் ஃபுல்ஸ்டாப் வைத்தார் அஜீத்.


அஜித் வேண்டுகோள் வைத்த சிறிது நாட்களிலேயே, இனி தன்னை யாரும் உலக நாயகன் என அழைக்க வேண்டாம் என அறிவிப்பை வெளியிட்டார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன். உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பலரும் இது போன்ற அறிவிப்புக்களை வெளியிட்டு வந்தது தமிழ் சினிமாவில் புதிய டிரெண்டாகவும், புதிய மாற்றமாகவும் பார்க்கப்பட்டது. அஜித், கமலை தொடர்ந்து தற்போது நடிகர் ஜெயம் ரவியும் இனி யாரும் தன்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என்றும், ரவி மோகன் என்று மட்டும் அழைத்தால் போதும் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தனது அண்ணனும், டைரக்டருமான மோகன் ராஜா இயக்கிய ஜெயம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி. இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். ரவி, தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். அது முதலே கடந்த இரண்டு மாதங்களாக ரவி குறித்த செய்திகள் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.


இந்நிலையில் இன்று தன்னை இனி யாரும் ஜெயம் ரவி என அழைக்க வேண்டும் என்றும், ரவி மோகன் என்று மட்டும் அழைத்தால் போதும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு தான் புதிதாக தயாரிப்பு நிறுவனம் துவங்க உள்ளதையும் அவர் அறிவித்துள்ளார். டாப் ஹீரோக்கள் பலரும் அடைமொழிகளை தவிர்த்து, தங்களின் சொந்த பெயர்கள் மூலமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நினைப்பது நல்ல மாற்றமாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது.


இதேபோல சூப்பர்ஸ்டார் பட்டத்தை ரஜினிகாந்த் துறப்பாரா, புரட்சி தளபதி பட்டத்தை விஷால் துறப்பாரா .. பட்டப் பெயர்களில் அழைக்கப்படும் மற்றவர்களும் கூட இதை பாலோ செய்வார்களா என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Makara Jyothi 2025: சாமியே சரணம் ஐயப்பா.. சபரிமலையில் மகரஜோதி .. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

news

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு.. 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்திக்.. கார் பரிசு!

news

Jailer 2 Teaser: அதிரடியாக வெளியானது ஜெயிலர் 2 டைட்டில் டீசர்.. வேற லெவல் ரஜினிகாந்த்!

news

ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!

news

ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி

news

இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?

news

தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!

news

பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!

news

மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அதிகம் பார்க்கும் செய்திகள்