போதைப் பொருள் வழக்கில்.. கைதான எஸ்ஆர்எம் மாணவர்களில் ஒருவர் தற்கொலை.. அதிர்ச்சியில் சக மாணவர்கள்!

Sep 04, 2024,02:44 PM IST

சென்னை:   சமீபத்தில் எஸ்ஆர்எம் கல்லூரியில் நடந்த போதைப்பொருள் ரெய்டைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில மாணவர் ஒருவர் தற்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துள்ளார். சக மாணவர்களிடையே இது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்துதல் அதிகரித்து வந்த நிலையில் இதனை சுட்டிக்காட்டி பல்வேறு அரசியல் கட்சி சார்ந்த தலைவர்கள் கடும் விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். இது தவிர கல்லூரியில் மட்டுமல்லாமல் பள்ளிகளிலும் கூட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக பெற்றோர்களும் புகார்களை தெரிவித்து வந்தனர் . 




இதன் காரணமாக சமீப காலமாக தமிழக முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் தொடர்பான தேடுதல் வேட்டையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை அருகே உள்ள மிக பிரபலமான எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது‌. இதனை தொடர்ந்து 500க்கும் மற்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, பல்வேறு வகையான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். 


இதில் சம்பந்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் கைதாகி பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். இந்த வழக்கு விவகாரம் தெரிந்து அவரது பெற்றோர் மாணவரைத் தொடர்பு கொண்டு கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான அந்த மாணவர் தற்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.


இதனையடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்