பழங்குடியினத்திலிருந்து நீதிபதியாக உயர்ந்த ஸ்ரீபதி.. ஜவ்வாது மலையின் முதல் நீதிபதியாகி அசத்தல்!

Feb 13, 2024,08:41 PM IST

திருவண்ணாமலை: பழங்குடியினத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி என்பவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல்  நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம், பழங்குடியினத்திலிருந்து நீதிபதியான முதல் பெண் என்ற பெருமையை படைத்துள்ளார் ஸ்ரீமதி.


தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பழங்குடியின மக்கள் 40% பேர் வாழ்ந்து வருகின்றனர். இதில் மலைக்குறவர், இருளர், காடர், தோடர் உள்ளிட்ட 40 வகையான பழங்குடியின மக்கள் உள்ளன. இவர்கள் காடும் நிலமும் சார்ந்த பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் உடை, பேச்சு, உணவு போன்ற அனைத்திலும் தனிக் கலாச்சார பாரம்பரியப் பின்னணியுடன் வாழ்ந்து வாழ்கின்றனர். 


பழங்குடியின மக்களை உயர்த்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல திட்டங்கள், சலுகைகள் அவர்களுக்காக அமல்படுத்தப்பட்டு வருகிறது. பழங்குடியின இன மக்களும் பல்வேறு துறைகளில் சாதித்தும் வருகின்றனர்.  இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைக்கு அருகே உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி (23) புதிய வரலாறு படைத்துள்ளார். இவர் பழங்குடியின பெண். இவருடைய கணவர் வெங்கட்ராமன். 




ஸ்ரீபதி, கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். தமிழ் வழியில் கல்வி பயின்று முதன்முதலாக பழங்குடியின வகுப்பிலிருந்து நீதிபதியாக ஆகி புதிய சகாப்தம் படைத்துள்ளார் ஸ்ரீபதி.


புலியூர் கிராமம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள ஊராகும். அங்கு  பல வசதிகள் கிடையாது. குறிப்பாக சரியான சாலை கூட இல்லை. இந்த சூழ்நிலையிலும் ஸ்ரீமதி பல தடைகளையும் தாண்டி படித்து தேர்வில் வெற்றி பெற்று ஜவ்வாது மலையின் முதல் பெண் நீதிபதியாக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


நீதிபதி தேர்வு வெற்றி பெற்ற பழங்குடி பெண் ஸ்ரீபதி விரைவில் ஆறு மாத பயிற்சிக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நீதிபதி தேர்தல் வெற்றி பின் சொந்த ஊருக்கு திரும்பிய ஸ்ரீபதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் இவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியெல்லாம் ஸ்ரீபதிக்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


இதேபோல் உதகை மாவட்டம் அருகங்காடு பகுதியில் வாழ்ந்து வரும் நீத்து (வயது 18) என்ற மாணவி கடந்த ஆண்டு நீட் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


ஸ்ரீபதியின் சாதனை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:


திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!


பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!


சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!


“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல

நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!


பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும்

பெண்களைக் கற்கவைப் பீரே!

இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன்

னேறவேண் டும்வைய மேலே!”

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்