நூற்றாண்டு கனவு நனவாகியுள்ளது.. அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.. இலங்கை அதிபர் அனுரா

Sep 23, 2024,06:15 PM IST

கொழும்பு:   இலங்கையில் ஒன்பதாவது அதிபராக அனுரா குமார திசநாயக்கே இன்று பதவியேற்றார். நூற்றாண்டு கனவு நனவாகியுள்ளதாக  கூறியுள்ள அவர், சிங்களர்களும், தமிழர்களும், முஸ்லீம்களும் அனைவரும் இணைந்து இந்த நாட்டை வளப்படுத்துவோம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.


இலங்கை ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இது ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் ஆகும். இதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, தேசிய  மக்கள் கட்சி தலைவர் அனுரா குமாரா திசநாயக்கே உட்பட 38 பேர் போட்டியிட்டனர்.



தேர்தல் முடிந்த உடனேயே முதல் விருப்ப வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் இரண்டாவது  விருப்ப வாக்கு எண்ணிக்கையின்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைவிட 12 லட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திசநாயக்கே வெற்றி பெற்றார். இடதுசாரி தலைவர் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றி பெறுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.


இந்த நிலையில் கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கையின் ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார் அனுரா குமாரா திசநாயக்கே. இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்ய, அனுரா குமாராவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


அரசியல் பிண்ணனி இல்லாத விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர் அனுரா குமாரா திசாநாயக்கே. இவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கொழும்பு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 2014 முதல் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சித் தலைவராகவும், 2019 முதல் தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் செயல்பட்டார். 


தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து பாடுபடுவோம்




ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அனுரா குமாரா வெளியிட்ட அறிக்கையில், நூற்றாண்டுக் கனவு நனவாகியுள்ளது. இது ஒரு தனி மனிதரின் வெற்றி அல்ல. மாறாக லட்சக்கணக்கான மக்களின் வெற்றி. உங்களது உறுதிதான் இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது. இதற்காக உங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். இந்த வெற்றி நமது அனைவருக்கும் சொந்தமானது.


மக்களின் தியாகத்தாலும், வியர்வையாலும், பல உயிரிழப்புகளாலும் இந்த பயணம் தொடர்ந்துள்ளது. இந்த தியாகங்கள் மறக்கப்படாது. உங்களது நம்பிக்கையும், போராட்டமும் கவனத்தில் கொள்ளப்படும். கோடிக்கணக்கான மக்களின் கண்களில் துளிர்த்துள்ள நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் என்னை மிகவும் பொறுப்புடன் செயல்பட வைக்கும். அனைவரும் இணைந்து இலங்கையின் புதிய வரலாற்றை எழுதுவோம்.


புதிய தொடக்கமாக இது அமையும். சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் இலங்கையின் அனைத்து மக்களும் இணைந்து இந்த கட்டமைப்பை உருவாக்குவோம் என்றார் அவர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்