கொழும்பு: இலங்கையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இதையடுத்து செப்டம்பர் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக நாடாளுமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 225 தொகுதிகளை கொண்ட இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது இலங்கையின் 17 வது நாடாளுமன்ற தேர்தலாகும். இந்த தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்க இருக்கிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்காக 13,421 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் 5,464 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் 3,357 என மொத்தம் 8,821 பேர் போட்டியிடுகின்றனர். குறிப்பாக இதில் மூத்த அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் போட்டியிடுவதை விட சுயேச்சையாக களம் காணும் வேட்பாளர்களே அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 4 மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தை ஜனாதிபதியின் அனுரா கட்சி கைப்பற்றினால், ஆட்சி நிர்வாகம் சிக்கல் இல்லாமல் போகும். வேறு கட்சி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி விட்டால் அதிபரின் செயல்பாடுகள், திட்டங்கள் சிக்கலுக்குள்ளாகும் என்பதால் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}