நகைச்சுவை.. கொஞ்சம் ஆக்ஷன்.. கூடவே சிந்தியா.. அப்படியே நம்ம இளையராஜா!

Dec 20, 2023,01:45 PM IST

சென்னை: இளையராஜாவின் இசையில் ஸ்ரீகாந்த்- அமெரிக்க நடிகை சிந்தியா நடிக்கும் புதிய படம் தான் தினசரி. படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.


மகா மூவி மேக்கர்ஸ்  சார்பில் விஜயமுரளி தயாரிக்கும் படம் தினசரி. இந்த படத்தின் நாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக  அமெரிக்காவை சேர்ந்த நடிகை சிந்தியா லெளர் டே நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சங்கர் பாரதி இப்படத்தை இயக்குகிறார். இதில் எம்.எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா இன்னும் பலர் நடிக்கின்றனர்.




இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவையும், ஜான் பிரிட்டோ கலையையும், சாம் சண்டை பயிற்சியையும், தினேஷ் நடன பயிற்சியையும் , பாலமுருகன், சண்முகம் இருவரும் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர்.


கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கி வரும் சங்கர் பாரதி படத்தை பற்றி கூறும்போது,  மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது.? குறிப்பாக இளைஞர்கள்  பணம் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை நகைச்சுவையுடன் ஆக்சனையும் கலந்து விறு விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன்.




நாயகனாக நடிக்கும் ஸ்ரீகாந்த் ஜோடியாக அமெரிக்காவில் வாழும் சிந்தியா லெளர் டேவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளேன். பிரேம்ஜி, எம்.எஸ். பாஸ்கர் , மீரா கிருஷ்ணன், வினோதினி, முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்கள்.


இளையராஜா இசையில் முதல் பட இயக்குனர்களின் படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வரும் சென்டிமெண்டில் இப்பொழுது நானும் இணைகிறேன். எனக்கு இது தான் முதல் படம்- இளையராஜா என்ற மாபெரும் சாதனையாளர் என்படத்திற்கு இசையமைப்பது நான் செய்த பாக்கியம் என்று கூறினார்.




படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள தினசரி படத்தில் இரண்டு பாடல்களுக்கு மாபெரும் அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர்.விரைவில் திரைக்கு வர உள்ளது  தினசரி  திரைப்படம்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்