1500 கிலோமீட்டர்.. இலங்கையின் கடலோரத்தை நடந்தே கடந்து சாதனை படைத்த.. இளைஞர் ஷஹமி ஷாஹீத்!

Aug 30, 2024,06:26 PM IST

கொழும்பு: இலங்கையின் கடலோரப் பகுதியை நடந்தே கடந்து உலக சாதனை படைத்துள்ளார் 25 வயதேயான இளைஞர் ஷஹமி ஷாஹீத். இவர் நடந்து கடந்து தூரம் எவ்வளவு தெரியுமா.. ஜஸ்ட் 1500 கிலோமீட்டர் தான்!


இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கலுத்தரா மாவட்டத்தில் உள்ள பேருவளை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஷஹமி ஷாஹீத்.  25 வயதான ஷாஹீத்துக்கு தனது நாட்டின் கடலோரத்தை நடந்தே கடந்து சாதனை படைக்க ஆவல் ஏற்பட்டது. இதையடுத்து தனது சாதனைப் பயணத்தை தொடங்கினார். 45 நாட்களில் தனது பயணத்தை முடிக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே இதை முடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.




பேருவளையில் தொடங்கிய இவரது பயணம் அம்பலன்கோடா, ரன்னா, மிரிஸல்ஸா, ஹம்பந்தோட்டா, வெல்லவயா, மொனரகலா, சியம்பலந்துவா, பொட்டுவில், நிலவேலி, முல்லைத்தீவு, பரந்தன், யானை இறவு, சுன்னாகம், மன்னார், மேடச்சியா, அனுராதபுரா, புத்தளம், மரவிளா என்று கடந்து கொழும்பு வழியாக பேருவளையில் முடிவடைந்தது.


இலங்கையின் அமைதி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த சாதனைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார் ஷாஹீத். இவரது இந்த நடை பயணத்திற்கு இலங்கையில் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. குறிப்பாக இளைஞர் சமுதாயதம் இவருக்கு ஆதரவாக போகும் இடமெல்லாம் திரண்டு வந்து ஆதரவு அளித்தது. 


தனது பயணம் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் போட்டபடியே பயணத்தை மேற்கொண்டிருந்தார் ஷாஹீத்.  இலங்கை மக்களே கூட அறியாத பல்வேறு இடங்கள் குறித்து அவர் தனது வீடியோக்களில்  கூறியதால் இலங்கை மக்களுக்கே இவரது பயணம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. அந்த இடங்களுக்கெல்லாம் போக வேண்டும் என்ற ஆர்வமும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகின. ஷாஹீத்தின் பயணம் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 




சாதனை படைத்த ஷாஹீத், தனது பயணத்தின் நிறைவாக அதிபர் ரனில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார். அவரை அதிபர் விக்கிரமசிங்கே வெகுவாக பாராட்டினார்.  மேலும் சிறப்புப் பரிசையும் வழங்கி கெளரவித்தார். தொடர்ந்து இதுபோல ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்யுமாறும் அவர் ஊக்கம் அளித்தார்.


இளைஞர் ஷஹமி ஷாஹீத்தின் இந்த நடை பயணம் இலங்கை மக்களிடையே மிகப் பெரிய பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்