Sprituality: வீட்டில் செல்வம் சேர.. விளக்கேற்றி வழிபடும்போது.. தவறாமல் இந்த மந்திரத்தை சொல்லுங்க!

Oct 25, 2024,04:41 PM IST

-  ஸ்வர்ணலட்சுமி


சென்னை : நம்முடைய வழிபாட்டு முறைகளில் விளக்கேற்றி வழிபடுவது என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சாதாரணமாக நாம் தெய்வத்தை வணங்கி, வழிபடுவதை விட, விளக்கேற்றி வைத்து வழிபட்டால் அதன் பலன் பல மடங்கு அதிகமாக கிடைக்கும். வீட்டில் தினமும் காலை மற்றும் மாலையில் விளக்கேற்றுவது அவசியம். இரு வேளையும் விளக்கேற்ற முடியாதவர்கள் ஒரு வேளை மட்டுமாவது விளக்கேற்றி வழிபட வேண்டும். 


தீபத்தில் ஒளிர்விடும் சுடரானது வீட்டில் உள்ள தீப சக்திகளை விளக்கும் தன்மை கொண்டது. வீட்டில் தீபம் ஏற்றுவதால் எதிர்மறை ஆற்றல்கள் விலகும். எந்த வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அங்கு மகாலட்சுமி விரும்பி வந்து குடி கொள்வாள் என்பது ஐதீகம். அதிலும் மகாலட்சுமிக்கு விருப்பமான, மங்களகரமான நாட்களாக கருதப்படும்  வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். 


பெண்கள் வீட்டில் விளக்கேற்றும் போது மனதில் மகாலட்சுமியையும், தீப லட்சுமியையும் மனதார நினைத்துக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். அப்படி ஏற்றும் போது தீப மகாலட்சுமிக்குரிய போற்றி மாலையை சொல்லியபடி விளக்கேற்றுவதால் மகாலட்சுமியின் மனம் மகிழும் என சொல்லப்படுகிறது.




தீப மகாலட்சுமி போற்றி மாலை:


"ஓம் பொன்னும் பொமெய்ப்பொருளும் தருவாய் போற்றி

ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி

ஓம் முற்றறி வெளியாய் மிளிர்ந்தாய் போற்றி

ஓம் இயற்கை அறிவொளியானாய் போற்றி

ஓம் ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி

ஓம் அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி

ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி!"


தீப மகாலட்சுமிக்குரிய இந்த போற்றி மாலையை தினமும் விளக்கேற்றும் போது சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். மகாலட்சுமியின் அருள் அந்த வீட்டில் எப்போதும் நிறைந்திருக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்