ஆளே இல்லை.. ஹைதராபாத் - அயோத்தி விமான சேவை.. நிறுத்தியது ஸ்பைஸ்ஜெட்!

Jun 13, 2024,06:11 PM IST

ஹைதராபாத்: ஹைதராபாத்- அயோத்தி இடையிலான நேரடி விமான சேவையை ரத்து செய்ய உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. தொடங்கிய இரண்டு மாதங்களிலேயே இந்த சேவை நிறுத்தப்படுகிறது.


அயோத்தியில் பிரமாண்ட அளவில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பல்வேறு முக்கிய பிரபலங்களும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்து கலந்து கொண்டனர். அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து இங்கு ஏாளமானோர் வந்து ராமரை வழிபட்டு சென்றனர். இதனால் அயோத்தியில் கூட்டம் அதிகரித்தது. 




திருப்பதி கோவிலை மிஞ்சி விடும்.. இனிமேல் அயோத்தி ராமர் கோவில்தான் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக இருக்கும் என்றெல்லாம் இது வர்ணிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்தை பெறத் தவறியதாலும், அயோத்தியை உள்ளடக்கிய எம்.பி. தொகுதியியேலே பாஜக தோல்வியைச் சந்தித்ததாலும் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. பாஜகவினர் பலரும் அயோத்திக்கு எதிராக திரும்பியுள்ளனர். பலர் ராமரை வணங்குவதையே விட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் அயோத்திக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அடியோடு குறைந்து விட்டது.


அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், ராமர் கும்பாபிஷேகத்திற்கு முன்பாகவே கடந்த டிசம்பர் 30ம் தேதி அயோத்தியில் மகரிஷி வால்மீகி விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், ஜனவரி 21ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் தலைநகர் டெல்லியில் இருந்து  அயோத்திக்கு ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடங்கப்பட்டது. 


ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மும்பை, சென்னை, அகமதாபாத், ஜெய்பூர், பெங்களூரு, பாட்னா உள்ளிட்ட  நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக தொடங்கி நடந்தி வந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், தற்பொழுது, ஹைதராபாத் - அயோத்தி இடையேயான சேவையை மட்டும் நிறுத்திள்ளது. பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.


அயோத்தியில் மிகப் பிரமாண்டமாக கோவில் கட்டி திறந்து கடைசியில் இப்படி கூட்டமே வராத நிலை ஏற்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்