Pongal special.. தாம்பரம் - திருச்சி இடையே பொங்கல் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Jan 03, 2025,06:59 PM IST

சென்னை: தாம்பரம்- திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரயில் பொங்கலையொட்டி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலை, படிப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் சொந்த ஊரை விட்டு சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கமாக வைத்துள்ளனர். 


சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குத்தான் அதிக அளவிலான மக்கள் ஒவ்வொரு பண்டிகையின்போதும் செல்வது வழக்கம். அனைவரும் பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறையின் போதும் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். அதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பண்டிகை காலங்களின் போது சிறப்பு ரயில், சிறப்பு பேருந்து, சிறப்பு விமானம் என பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்படும்.




இந்த சிறப்பு வசதிகளினால் கூட்டம் நெரிசல்  குறைந்து, சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நிம்மதியாக சென்று வருகின்றனர். அந்த வகையில், வருகிற பெங்கல் பண்டிகைக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதில் ஒரு ரயிலானது திருச்சியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


திருச்சியில் இருந்து தாம்பரம் இடையே ஜன் சதாப்தி சூப்பர் பாஸ்ட்  ரயில் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் 06190  திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலானது திருச்சியில் காலை 5.35 மணிக்கு கிளம்பி தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலானது ஜனவரி 4,5,10,11,12,13,17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.


இந்த ரயில் மறு மார்க்கமாக தாம்பரத்தில் இருந்து மாலை 03.50க்கு கிளம்பி திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு சென்றடையும். ஜனவரி 4,5,10,11,12,13,17,18, மற்றும் 19ம் தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பத்ரிப்புலியூர், பன்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அபார்ட்மென்ட் நாய், பூனைகளுக்கு ஹேப்பி நியூஸ்.. வளர்க்க கட்டுப்பாடு கிடையாது.. சென்னை கோர்ட் அதிரடி

news

அச்சச்சோ.. சீனாவிலிருந்து வந்துருச்சு.. இந்தியாவின் முதல் HMPV வைரஸ்.. பெங்களூருவில் கண்டுபிடிப்பு

news

தமிழ்நாடு முழுவதும்.. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு.. கலெக்டர்கள் வெளியிட்டனர்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் பாடப்படவில்லை.. வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

news

3வது ஆண்டாக சர்ச்சை.. தமிழ்த் தாய் வாழ்த்தால் தொடரும் சலசலப்பு.. வெளிநடப்பு செய்த ஆளுநர்!

news

சட்டசபைக் கூட்டம்.. தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளியேறினார்.. ஆளுநர் ரவி.. அதிமுக அமளி!

news

CPI (M).. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு

news

சிந்து வெளிப் புதிர்.. விடை கண்டுபிடிப்போருக்கு.. 1 மில்லியன் டாலர் பரிசு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்