உலக தமிழ் ஆராய்ச்சி மையம், தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் - பட்ஜெட்டில் அறிவிப்பு

Mar 14, 2025,05:25 PM IST

சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்கள் மற்றும் மதுரையில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம்  கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


2025 - 2026 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்து வருகிறார்.அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் திமுக தலைமையிலான் அரசு 5ஆவது  மற்றும் கடைசி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்து வருகிறது.


இதன்காரணமாக பொதுமக்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டி கட்டாயத்தில் தமிழக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.




தமிழ் மொழியின் சிறப்பிக்கும் வகையில், மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தில் அருங்காட்சியகம் அமைப்படும். அத்துடன் மதுரையில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


தமிழுக்கான அறிவிப்பு:


47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும். தமிழர்கள் அதிகம் வாழும் பிற இந்தி பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.


உலகத் தமிழ் ஒலிம்பியாட்:


தமிழின் பெருமையை பரப்பிட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய உலகத் தமிழ் ஒலியாட் போட்டி நடத்தப்படும்.


தொல்லியல் துறைக்கான அறிவிப்புகள் !


கீழடி, தெலுங்கனூர், வெள்ளலூர், ஆதிச்சனூர், மணிக்கொல்லை, கரிவலம்வந்தநல்லூர், பட்டணமருதூர், நாகை ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வு


ஈரோட்டில் ரூ.22 கோடி செலவில் நொய்யல் அருங்காட்சியகம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.21 கோடி செலவில் நாவாய் அருங்காட்சியகம்


எழும்பூர் அருங்காட்சியகத்தில் ரூ.40 கோடியில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக் கூடம்


மத்திய அரசு நிதி தராவிட்டாலும் பாதிப்பு இருக்காது


சமக்ரசிக்சா திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும், தமிழக மாணவர்களின் கல்வியில் ஒரு துளி கூட பாதிப்பு இருக்காது. மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு ரூ.2,150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. ஆனாலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசே அதற்கான நிதி விடுவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஈட்டிய விடுப்பு சரண் முறை மீண்டும் அமல்!

news

பெண்களுக்கு சொத்தில் உரிமை.. அது கருணாநிதி.. சொத்து வாங்கினால் 1% சலுகை.. இது முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சாமானிய மக்களுக்கு வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக : பாஜக தலைவர் அண்ணாமலை

news

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்குடன் தமிழக பட்ஜெட்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

news

வெற்று அறிவிப்பு... விளம்பரத்திற்காக மட்டுமே போடப்பட்ட பட்ஜெட்: எடப்பாடி பழனிச்சாமி

news

Tamil Nadu Budget 2025: பள்ளி, கல்லூரிகளுக்கான அதிரடி அறிவிப்புகள்

news

கருப்பை வாய் புற்றுநோய்: 14 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

news

கல்வியை கலைஞர்மயமாக்க நினைக்கும் திமுக... டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் கடும் தாக்கு!

news

உலக தமிழ் ஆராய்ச்சி மையம், தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் - பட்ஜெட்டில் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்