சென்னை: கூட்டுறவுத்துறை சார்பில், இன்று முதல் கூட்டுறவு அங்கன்வாடி மையங்களில் சிறப்பு பொங்கல் தொகுப்புகள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தமிழர் திருநாளாம் தைத்திருநாள் எனும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல், 15ஆம் தேதி புதன்கிழமை மாட்டுப் பொங்கல், 16ஆம் தேதி வியாழக்கிழமை காணும் பொங்கல் என வருகிறது. 17ஆம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனுடன் வார இறுதி நாட்கள் சேர்ந்து மொத்தம் 6 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கிறது. இதன் காரணமாக சொந்த ஊருக்குச் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் இப்போது இருந்தே ஆயத்தமாகி விட்டனர்.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகையும் ஆயிரம் ரூபாய் ரொக்க தொகையும் வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் வெல்லம் தரக் குறைவாக இருந்ததாக பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து கடந்த ஆண்டு வெல்லம் இல்லாமல், பச்சரிசி, முழு கரும்பு, சர்க்கரையுடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்டது. இந்த வருடம் எப்போது பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் கூட்டுறவு துறை சார்பில் இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் கூட்டுறவு அங்கன்வாடி மையங்களில் விற்பனை செய்யப்பட்டப்படுகிறது. ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் குறைந்த விலையில் 199 ரூபாய் மதிப்புள்ள இனிப்பு பொங்கல் தொகுப்பு, 499 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு பொங்கல் தொகுப்பு, 999ரூபாய் மதிப்புள்ள பெரும் பொங்கல் தொகுப்பு என மூன்று பிரிவுகளில் விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இனிப்பு்ப பொங்கல் தொகுப்பு: அதன்படி பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருட்கள் கொண்ட இனிப்பு பொங்கல் தொகுப்பு ரூபாய் 199 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பு பொங்கல் தொகுப்பு: மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் 19 பொருட்கள் அடங்கிய கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூபாய் 499க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெரும் பொங்கல் தொகுப்பு: அதேபோல் மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பை என 35 பொருட்கள் கொண்ட பொங்கல் தொகுப்பு ரூபாய் 999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மார்கழி 4 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 4.. ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்!
அடடா மழைடா அடை மழைடா.. சென்னை, புறநகர்களில் காலை முதல் விடாமல் கொட்டித் தீர்க்கும் மித மழை..!
அம்பேத்கர் அம்பேத்கர்.. உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம்.. தவெக தலைவர் விஜய்
அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அம்பேத்கரை எப்படியெல்லாம் காங்கிரஸ் அவமதித்தது?.. பட்டியலிட்ட பிரதமர் நரேந்திர மோடி!
Samai Pongal and Ven Poosani paruppu sambar.. டேஸ்ட்டியான சாமை பொங்கல் + வெண்பூசணி பருப்பு சாம்பார்!
Pongal.. சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை.. இன்று முதல்.. ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில்!
புதுச்சேரியில்.. டிசம்பர் 28ம் தேதி பா.ம.க பொதுக்குழு கூட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}