புதுச்சேரியில்.. தனியார் பள்ளிகளில் 6 மணிக்கு மேல் ஸ்பெஷல் கிளாஸ் நடத்தக் கூடாது.. அரசு தடை!

Jan 31, 2025,11:35 AM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக வந்த தொடர் புகார் எதிரொலியாக, கல்வித்துறை  மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தடையை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


2024-25ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் வருவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இதனால் மாணவ மாணவிகள் தேர்வை நோக்கி  பயணம் செய்து வருகின்றனர். கடுமையாக உழைக்க தொடங்கி விட்டனர். ஏனெனில் பிளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் விரும்பிய படிப்பை தொடர முடியும். இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் போட்ட போட்டிக்கொண்டு படிக்க துவங்கி விட்டனர்.




அதே சமயத்தில் 10,11, 12 ,வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவும், நல்ல மதிப்பெண்கள் எடுக்கவும் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் பள்ளி சென்டம் ரிசல்ட்டை கொடுத்து முதலிடம் பெற வேண்டும் என்பதற்காகவும் விடுமுறை தினங்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.


இதன் காரணமாக ஏற்கனவே அரசு பொது விடுமுறை தினங்களில் 10, 11, மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவித்திருந்தது. அதன்படி பொதுமுறை  நாட்களில் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டு வந்தது. 


ஆனால் தற்போது பள்ளி செயல்படும் நாட்களில் பள்ளி முடித்த பிறகு, மாலை 6  முதல் இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தது. இந்த புகாரின் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவை பிறப்பித்துள்ளது கல்வித்துறை. 


இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயங்கும் சில தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் வார விடுமுறை நாட்களிலும் அரசு விடுமுறை அளிக்கும் நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக கவனத்துக்கு வந்துள்ளது. இது மாணவர்களுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 


அதன்படி எந்த ஒரு தனியார் பள்ளியும் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் மற்றும் பிறத்திறன் சார்ந்த வகுப்புகளை நடத்தக் கூடாது. அதேபோல் வார விடுமுறை நாட்களிலும், விடுமுறை அரசு விடுமுறை அறிவிக்கும்  நாட்களிலும், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும்  கல்வி நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்