வார இறுதி நாட்கள், கிருஷ்ண ஜெயந்தி.. கூடுதலாக 985 சிறப்பு பேருந்துகள்.. போக்குவரத்து கழகம் திட்டம்!

Aug 23, 2024,05:07 PM IST

சென்னை: வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு, திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், தினசரி இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக மொத்தம் 985 சிறப்பு பேருந்துகளை இயக்க மாநில போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை நாட்கள் வந்தாலே மக்கள் வீடுகளில் இல்லாமல் வெளியேறி தங்கள் பொழுதுகளை கழிக்க பல்வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். இதற்காக போக்குவரத்து சேவைகளை அதிகம்  பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு செல்ல அதிக அளவு மக்கள் பஸ் சேவையை பயன்படுத்துவது வழக்கம். அந்த வரிசையில் இந்த வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் எளிதாக பயணம் செய்யவும் தினசரி இயக்கப்படும்  பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.




அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அதாவது சனி மற்றும் ஞாயிறு அன்று திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 25, 26-ம் தேதிகளில் 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 23 மற்றும் 24-ம் தேதிகளில் ஓசூர், பெங்களூரு, திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணிக்கு 70 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் பிற பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 985 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc என்ற ஆப் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரகசியமாக நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்...வாழ்த்து மழையில் நனைந்த தம்பதிகள்..!

news

கூட்டணி தொடருமா?...முதல்வருடன் பேசியது என்ன?...திருமாவளவன் அளித்த பளிச் பதில்

news

மறுபடியும் வந்துட்டோம்...புதிய பட அறிவிப்பை வெளியிட்டார் லெஜண்ட் சரவணன்

news

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு...கைதானவர் சிறையில் தற்கொலை

news

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்..!

news

கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டில்லியின் அடுத்த முதல்வர் யார்?

news

மதுவிலக்கால் கூட்டணியில் பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்...திருமாவளவன் அதிரடி

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம்... சவரன் ரூ.55,000ஐ தாண்டியது

news

அக்டோபர் 3வது வாரத்தில் விஜய் கட்சி மாநாடு? அனுமதி கேட்டு மீண்டும் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்