ரஜினிக்கு பதிலாக விஜய்யை வைத்து பாஜக கட்சி ஆரம்பித்துள்ளார்களோ: சபாநாயகர் அப்பாவு கேள்வி

Oct 28, 2024,08:59 PM IST

திருநெல்வேலி:  பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்தார்கள். அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்து இறக்கி இருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.


நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து விவசாய சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில்,பாபநாசம் அணையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சுமார் 86,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. 400 கோடி ரூபாயில் 3 லட்சம் டன் நெல்லை  கொள்முதல் செய்யும் அளவுக்கு குடோன்கள் உருவாக்கப்பட்டுள்ளது.




தவெக மாநாட்டிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், நானும் வாழ்த்துச் சொல்லிக் கொள்கிறேன்.விஜய் கட்சி ஆரம்பித்ததில் யாருக்கும் ஆட்சேபனை கிடையாது. ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் விஜய்யும் கட்சி ஆரம்பித்துள்ளார். அதை நான் வரவேற்கின்றேன். திமுக பணம் சம்பாதிப்பதாக விஜய் சொல்லி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும் போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம்.


தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாஜக தலைவர் உடன் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அப்படி பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் அவர் எப்படி தவெக கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்று தெரியவில்லை. பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள். அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்து இருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.


விஜய்யின் அப்பா,புஸ்ஸி ஆனந்த் பற்றி கூறும் போது, என் மகன் விஜய்யுடன் இருப்பவர்கள் கிரிமினல்கள் தான் என்று சொன்னார்.நான் சொல்லவில்லை.விஜய்யின் அப்பாதான் சொன்னார். அப்போது எதற்காக அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஒரு சமயம் கிரிமினல் இப்போது நல்ல ஆளாக மாறியிருக்கலாம். அதுவும் எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்