சென்னை: தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். சென்னையில் இன்று நள்ளிரவுக்கு மேல் மழை தொடங்கி காலை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடும் கோடை சற்று அடங்கி தற்போது ஆங்காங்கே மழை பெய்து பூமியின் வெட்கையைத் தணித்து மக்களைக் குளிர் வித்து வருகிறது. விரைவில் தென் மேற்குப் பருவ மழையும் தொடங்கும் என்பதால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சுடன் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு சூப்பர் செய்தியை சொல்லியுள்ளார். அதாவது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்டாஸ, கரூர், நாமக்கல், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
நாளையும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பா டெல்டா பகுதிகளில் நல்ல மழைக்கு மிகப் பெரிய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை இன்று நள்ளிரவுக்கு மேல் மழை தொடங்கி காலை வரை பெய்யலாம். நாளை அலுவலகம் செல்லும் போது குடையை எடுக்க மறக்காதீர்கள். ரெயின் கோட்டும் அவசியம். இன்னும் 2 - 3 நாட்களுக்கு அது தேவைப்படும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?
தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!