சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலையொட்டி, ராமநாதபுரத்திலிருந்து தாம்பரம் ரயில் சந்திப்பு வரையிலான ஒரு வழி சிறப்பு ரயில் நவம்பர் 3ம் தேதி இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல லட்சம் பேர் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இவர்களுக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது தீபாவளி முடிந்துள்ள நிலையில் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கிறது. அதன் பின்னர் மக்கள் மீ்ண்டும் சென்னைக்குத் திரும்புவார்கள்.
சென்னை திரும்பும் பயணிகளின் நலனுக்காக சிறப்புப் பேருந்துகளும், ரயில்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ராமநாதபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு ஒரு வழி சிறப்பு ரயில் நவம்பர் 3ம் தேதி இயக்கப்படவுள்ளது. இதற்கான ரிசர்வேஷன் தொடங்கி விட்டது.
இந்த ரயில் ராமநாதபுரத்திலிருந்து நவம்பர் 3ம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும். அங்கிருந்து பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
சிறப்பு ரயிலில், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 11 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், ஒரு லக்கேஜ் பெட்டி, 1 இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகள் பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டால் சஸ்பெண்ட்.. ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை
Devayani.. நீண்ட இடைவேலைக்கு பிறகு நாயகியாக தேவயானி நடிக்கும் .. நிழற்குடை!
2 போட்டு 34 ஜீரோ போட்டுக்கங்க... கூகுளுக்கு பயங்கரமான அபராதம் விதித்த ரஷ்ய அரசு.. என்னாச்சு??
அமரன் படம் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு.. கமல்ஹாசன் நன்றி!
ராமநாதபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. நவம்பர் 3ம் தேதி.. ரிசர்வேஷன் ஓபன் ஆயிருச்சு!
3 நாட்களில் 5.25 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணம்.. பட்டையைக் கிளப்பிய கிளாம்பாக்கம்!
AIADMK.. நவ. 6ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விஜய் மாநாட்டு தாக்கம் இருக்குமா?
நவம்பர் 1.. தமிழ்நாட்டின் எல்லை காத்த மாவீரர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் புகழாரம்!
Divya Sridhar weds Kris Venugopal.. இரு மனம் இணைவதுதானே திருமணம்.. இதை விமர்சிப்பது ஏனோ!
{{comments.comment}}