சென்னை: 2025 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் இங்கு பிப்ரவரி மாதத்தில் கொண்டாடும் தைப்பூச திருவிழா மிகவும் விசேஷமானது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அந்த வரிசையில் 2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது.
முன்னதாக 2024-25 ஆம் ஆண்டிற்கான சக்தி மாலை இருமுடி தேதி டிசம்பர் 15, 2024 அன்று தொடங்கி பிப்ரவரி 10 வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூச விழா நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி தற்போது பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து இருமுடி சுமந்து கோயிலுக்கு வர துவங்கியுள்ளனர். இதற்காக பக்தர்களிள் சிரமத்தை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை ஒவ்வொரு வருடமும் செய்து வருகிறது.
கடந்த ஆண்டு இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக இரண்டு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த வசதி பயனுள்ளதாக இருப்பதாக பக்தர்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர்.
அதேபோல் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூசம் மற்றும் இருமுடித் திருவிழாவை முன்னிட்டு வைகை எக்ஸ்பிரஸ் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தைப்பூசம் மற்றும் இருமுடி திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635) மேல்மருவத்தூரில் இரண்டு நிமிடங்கள் தற்காலிகமாக நின்று செல்லும். இந்த நடைமுறை இன்று அதாவது டிசம்பர் 28 முதல் பிப்ரவரி 11 வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
1 கிலோ பச்சரிசி.. 1 கிலோ சர்க்கரை.. கரும்பு.. பொங்கல் பரிசுத் தொகுப்பு ரெடி.. ஜன. 9 முதல் டோக்கன்!
அன்புமணியுடன் திடீர் மோதல்.. பேச்சைக் கேட்காட்டி வெளியேறி விடு.. கொந்தளித்த டாக்டர் ராமதாஸ்!
பாமக மேடையில் வெடித்த திடீர் வாக்குவாதம்.. டாக்டர் ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு இதுதான் காரணமா?
Panaiyur Poltics: தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பிடிக்கும் பனையூர்... நேற்று விஜய்.. இன்று அன்புமணி
Anna university: அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்த.. ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. மாணவிக்கு ரூ. 25 லட்சம் நிவாரண உதவி அளிக்க ஹைகோர்ட் உத்தரவு
திருவண்ணாமலையில் கொடுமை.. முக்தி அடைவதற்காக.. விஷம் அருந்தி வாழ்க்கையை முடித்த 4 பேர்!
New year 2025.. டிசம்பர் 31ம் தேதி வண்டலூர் ஜூவுக்கு ஜாலியா போய்ட்டு வாங்க.. லீவு கிடையாது!
Dr Manmohan Singh.. மன்மோகன் சிங்குக்கு ஆயிரக்கணக்கோனார் இறுதி அஞ்சலி.. டெல்லியில் உடல் தகனம்
{{comments.comment}}