தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

Oct 22, 2024,09:05 PM IST

சென்னை: தீபாவளி கூட்ட நெரிசல் எதிரொலியாக அக்டோபர் 4 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தீபாவளி அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக மக்கள் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் போக ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே வழக்கமான ரயில்களில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. இந்த நிலையில் சிறப்பு ரயில்களுக்காக மக்கள் காத்திருந்தனர். தற்போது சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.




சென்னை சென்டிரல் டூ கன்னியாகுமரி


அதன்படி சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து  கன்னியாகுமரிக்கு அக்டோபர் 29ம் தேதியும், நவம்பர் 5ம் தேதியும் ஒரு சிறப்பு ரயில் (ரயில் எண் 06001) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் பிற்பகல் 12.15 மணியளவில் கன்னியாகுமரியைச் சென்றடையும். இதேபோல இன்னொரு சிறப்பு ரயில் நவம்பர் 5ம் தேதி இயக்கப்படும்.


இந்த சிறப்பு ரயிலானது 2 ஏசி  டூ டயர் பெட்டிகள், 4 ஏசி த்ரீ டயர் பெட்டிகள், 12 ஸ்லீப்பர் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும்.  சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக இந்த ரயில் இயக்கப்படும்.


கன்னியாகுமரி டூ சென்னை எழும்பூர்


மறு மார்க்கத்தில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அக்டோபர் 30ம் தேதியும், நவம்பர் 6ம் தேதியும் சிறப்பு ரயில்கள் (ரயில் எண் 06002) இயக்கப்படும். இந்த ரயில்கள் கன்னியாகுமரியிலிருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.  மேற்கண்ட சிறப்பு ரயில்கள் நின்று  செல்லும் அதே நிலையங்களில் இந்த ரயிலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


சென்டிரல் டூ செங்கோட்டை


இதேபோல சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் ஒரு ரயிலும், மறு மார்க்கத்தில் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 7ம் தேதி இன்னொரு ரயிலும் இயக்கப்படும்.


இந்த ரயில்கள் நின்று செல்லும் நிலையங்கள் -  சென்னை சென்டிரல், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்ப்பேட்டை, சேலம், நாமக்கல்,  கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை ஆகியவை ஆகும்.


தாம்பரம் டூ கன்னியாகுமரி


தாம்பரம் - கன்னியாகுமரி இடையே இன்னொரு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயிலானது அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும் 12ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து புறப்படும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும்  12ம் தேதிகளில் கன்னியாகுமரியிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும்.


சிறப்பு ரயில்களுக்கான் முன்பதிவு நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும். தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்