தென் மேற்குப் பருவ மழை.. இன்றே கடைசி.. இன்று முதல் விடை பெறுகிறது!

Sep 25, 2023,04:16 PM IST

சென்னை: தென் மேற்குப் பருவ மழைக்காலம் இன்று முதல் முடிவுக்கு வருகிறது. தென்மேற்கு மழை காலம் படிபடியாக குறைந்து அடுத்து வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வழக்கமாக செப்டம்பர் 17ம் தேதியுடன் இந்த மழை முடிவடையும். ஆனால் இந்த ஆண்டு எட்டு நாட்கள் கழித்து இன்றுடன்  விடை பெறுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்த தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டில் கூடுதலாகவே பெய்துள்ளது. அதிலும் குறிப்பாக, சென்னையில் 8 சதவிதத்திற்கும் அதிகமாக  கூடுதல் மழை பெய்துள்ளது. 


தொடர்ந்து சென்னையிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேலும் கூடுதல் மழை தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானில் தென் மேற்குப் பருவ மழை தற்போது விடை பெற்று விட்டது. இந்தியாவின் இதர பகுதிகளிலும் இது படிப்படியாக விடைபெறும். 


செப்டம்பர் 30ம் தேதியுடன் தென் மேற்குப் பருவ மழை நாடு முழுவதும் முடிவுக்கு வரும். அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 3வது வாரத்தில் வட கிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்