நேரம் சரியில்லாட்டி இப்படித்தான்.. தென் ஆப்பிரிக்காவுக்கு 1996ல் நடந்த கொடுமையை பார்த்தீங்களா?

Jun 30, 2024,01:32 PM IST

டெல்லி: உலகிலேயே மிகவும் ராசியில்லாத அணி தென் ஆப்பிரிக்காவாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு பலமுறை பல்வேறு சாம்பியன் பட்டங்களுக்கு வெகு அருகே வந்து சொதப்பிச் சென்ற பெருமை இவர்களுக்கு மட்டுமே உண்டு.


1909ம் ஆண்டு ஐசிசியில் முழு நேர உறுப்பினராக அணி தென் ஆப்பிரிக்கா. ஆனால் முதல் முறையாக இந்த அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது 1889ம் ஆண்டு. அப்போது இங்கிலாந்துக்கு எதிராக போர்ட் எலிசபெத்தில் நடந்த போட்டியில் விளையாடியது. அதன் பிறகு இதுவரை 464 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா விளையாடியுள்ளது.  ஒரு நாள் போட்டி என்று பார்த்தால் 1991ம் ஆண்டு முதல் ஆடி வருகிறது. தென் ஆப்பிரிக்காவின் முதல் ஒரு நாள் போட்டியே இந்தியாவுடன்தான் நடந்தது. அதாவது இனவெறி காரணமாக சர்வதேச தடை விதிக்கப்பட்டு அந்தத் தடை நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா ஆடிய முதல் ஒரு நாள் போட்டி அது.  இதுவரை 672 ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா விளையாடியுள்ளது. டி 20 போட்டிகளைப் பொறுத்தவரை 2005 முதல் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா இதுவரை 185 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதெல்லாம் வழக்கமான புள்ளி விவரங்கள்தான்.


தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை சர்வதேச அளவில் ஒரு ஐசிசி பட்டத்தையும் வென்றதில்லை. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளைப் பொறுத்தவரை அதிகபட்சம் 3வது இடம் வரை வந்துள்ளது. ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டிகளைப் பொறுத்தவரை 8 முறை கலந்து கொண்டு, அதிகபட்சம் 1992, 1999, 2007, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதி வரை முன்னேறி அதன் பிறகு தோல்வியுற்று போய் விட்டது. நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பு வரை அது எந்த ஒரு ஐசிசி தொடரிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறியதே கிடையாது. இப்போதுதான் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்திருந்தது. எப்படியாவது கப்பை தட்டி வரலாறு படைத்து விட வேண்டும் என்ற வெறியுடன் தென் ஆப்பிரிக்கா இருந்தது. ஆனால் இந்திய வீரர்கள் தெறிக்க விட்டு விட்டனர்.


தென் ஆப்பிரிக்க அணி எந்த அளவுக்கு சொதப்பும் என்பதற்கு 1996-97ல் நடந்த டைட்டன் கோப்பைத்  தொடரை உதாரணமாக சொல்லலாம். 1996-97ல் நடந்த டைட்டன் கோப்பைத் தொடரானது முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடராகும். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இதில் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 3 போட்டிகளில் ஆட வேண்டும். அதில் டாப் 2 இடத்தைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இதில் இந்தியா 6 போட்டிகளில் ஆடி 3 தோல்வி, ஒரு டை மற்றும் 2 வெற்றி என்று 5 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்தது. ஆஸ்திரேலியா அணியோ 5 போட்டிகளில் தோற்று, ஒரு போட்டியில் முடிவு இல்லாமல் 1 புள்ளியுடன் தொடரை விட்டு வெளியேறியது. மறுபக்கம் தென் ஆப்பிரிக்க அணி தான் மோதிய 6 போட்டிகளிலும் வென்று அசத்தியிருந்தது. 12 புள்ளிகளுடன் ஜம்மென்று இருந்த தென் ஆப்பிரிக்கா, தோல்வியே காணாத அணியாக, இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்தித்தது.




மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களை எடுத்தது. சச்சின் டெண்டுல்கர் 67, அஸாருதீன் 26, ராகுல் டிராவிட் 31, அஜய் ஜடேஜா 43, நயன் மோங்கியா 15 ரன்கள் என எடுத்தனர்.  பிறகு தனது சேசிங்கைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவை வெங்கடேஷ் பிரசாத்தும், அனில் கும்ப்ளேவும் தங்களது பந்து வீச்சால் நிலை குலைய வைத்து விட்டனர். கும்ப்ளே 4 விக்கெட்களையும், பிரசாத் 3 விக்கெட்களையும் சாய்த்தனர். இறுதியில் 47.2 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்கா அணி 185 ரன்களில் சுருண்டு விட்டது. இந்தியா சாம்பியனாகி விட்டது.


லீக் முழுவதும் அசத்தி விட்டு இறுதிப் போட்டியில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா. அந்தத் தொடர் வெற்றிதான் இந்தியாவின் முதல் ஒரு நாள் தொடர் வெற்றி என்பது வரலாறு ஆகும். அதேபோல சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்தியா வெற்றி பெற்ற முதல் ஒரு நாள் தொடரும் அதுதான்.


இந்தத் தொடருக்கு வருவதற்கு முன்புதான் தென் ஆப்பிரிக்கா அணி ஷார்ஜா கோப்பையை வென்றிருந்தது. மேலும் அதன் பின்னர் நடந்த உலகக் கோப்பைத் தொடரிலும் சிறப்பாக விளையாடியிருந்தது. எனவே டைட்டன் கோப்பையையும் அதுவே வெல்லும் என்று கருதப்பட்டது. அதற்கேற்பவே லீக் சுற்று முழுவதும் அசத்தலாக விளையாடியது. ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியா வெளுத்து விட்டு விட்டது.


என்னதான் திறமை இருந்தாலும், நேரமும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்கு தென் ஆப்பிரிக்காவும் ஒரு உதாரணம்.

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்