சென்னை : விஜய்க்கு ஜோடியாக கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்திற்கான தனது போர்ஷன்களை முழுவதுமாக முடித்து விட்ட விஜய், தற்போது ஓய்விற்காக வெளிநாடு சென்றுள்ளார். அனிருத் இசையில், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்த வருகிறது.
மற்றொரு புறம், தளபதி 68 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள விஜய்யின் அடுத்த படத்திற்கான வேலைகளில் டைரக்டர் வெங்கட் பிரபு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார், யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிக்கப்பட்டு விட்டது. இந்த படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை வெங்கட் பிரபு ஏற்கனவே துவக்கி விட்டார்.
லியோ படத்தில் த்ரிஷாவை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைத்தது போல், தளபதி 68 படத்தில் நடிகை ஜோதிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க வெங்கட் பிரபு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான இரண்டு மாதங்களுக்கு முன் ஜோதிகாவிடம் பேசப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதில் லேட்டஸ்ட் தகவலாக, தளபதி 68 படத்தில் நடிப்பதற்காக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஜோதிகாவிடம் தேதி கேட்கப்பட்டுள்ளதாம்.
ஒருவேளை இந்த படத்தில் நடிக்க ஜோதிகா ஓகே சொல்லி விட்டார் என்றால், குஷி, திருமலை படங்களுக்கு பிறகு விஜய் - ஜோதிகா ஜோடி மீண்டும் திரையில் இணையும். கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி இணைந்து நடிக்க உள்ளது. இதற்கு முன் மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் கேட்டுள்ளார் அட்லீ. ஆனால் அந்த சமயத்தில் ஜோதிகா வேறு சில படங்களில் கமிட்டாகி இருந்ததால் அந்த கேரக்டரில் நித்யா மேனன் நடிக்க வைக்கப்பட்டாராம்.
{{comments.comment}}