டெல்லி: உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்குப் பிறகு விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கருத்து கூறியிருப்பதற்கு முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி உலகக் கோப்பைப் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்காக அனைத்து அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. கப்பை வெல்லப் போவது யார் என்ற விவாதங்களும் அனல் பறக்க நடந்து வருகின்றன.
இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் சில கருத்துக்களைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விராட் கோலி, உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அப்போதுதான் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாட முடியும. 100 சதங்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடிக்க முடியும்.
உலகக் கோப்பைக்குப் பிறகும் அவர் ஒரு நாள் போட்டிகளில் ஆட வேண்டும் என்று நான் கருதவில்லை. ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் கோலியை மிகவும் பலவீனமாக்கியுள்ளன. இதனால் டெஸ்ட் போட்டிகலில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது. இன்னும் 6 வருடங்களாவது அவர் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன். சச்சினின் 100 சத சாதனையையும் அவர் முறியடிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு சவுரவ் கங்குலி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து கங்குலியிடம் கேட்கப்பட்டபோது, ஏன் ஓய்வு பெற வேண்டும். அவரால் என்ன கிரிக்கெட்டெல்லாம் விளையாட முடியுமோ அதையெல்லாம் அவர் விளையாடலாம். அவர் பெர்பார்ம் பண்ணும் வரை ஓய்வு என்ற பேச்சே தேவையில்லை என்றார் கங்குலி.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் தடுமாற்றத்தை சந்தித்து குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சிறந்த வீரர்களை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் இடது கை ஆட்டக்காரர்களோ அல்லது வலது கை ஆட்டக்காரர்களோ அது முக்கியமில்ல. திறமையானவர்களை விளையாட விட வேண்டும். யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, இஷான் கிஷான் ஆகியோர் இருக்கிறார்கள். ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் டேல், ஹர்டிக் பாண்டியா.. இது அருமையான அணி. சந்தேகமே இல்லை. விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் இயல்பானது என்றார் கங்குலி.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}