திருமண நாளன்று ரஜினியும் லதாவும் என்ன செய்வார்கள்?.. பல வருட ரகசியத்தை உடைத்த மகள் சௌந்தர்யா!

Feb 27, 2024,04:46 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் அத்தனை பேருக்கும் டஃப் கொடுத்து, தொடர்ந்த மாஸ் ஹீரோக்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என உலக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் ரஜினிகாந்த்.


ரஜினிகாந்த் சினிமாவில் உச்ச நடிகராக வளர்ந்த பிறகு தான் திருமணம் செய்து கொண்டார். 1981ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி லதா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்தது. இவர்களின் முதல் சந்திப்பும், ரஜினிகாந்த் காதலை சொன்ன விதமும் சுவாரஸ்யமானது. 


தில்லு முல்லு படம் ரிலீசான சமயத்தில் எத்திராஜ் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் குழு ஒன்று ரஜினிகாந்த்தை பேட்டி எடுக்க வேண்டும் என வந்தது. அந்த குழுவில் ஒருவராக வந்தவர் தான் லதா.  அத்தனை பேர் கேள்வி கேட்டாலும், லதா கேட்ட கேள்விகளும், அவரின் அழகும், புத்திசாலித்தனமும் ரஜினியை ஈர்த்தது. சினிமா பற்றி பல கேள்விகள் கேட்ட லதா கடைசியாக, திருமணம் பற்றி கேள்வி கேட்டார். 




அதற்கு பதிலளித்த ரஜினி, உங்களை போன்ற ஒரு பெண் கிடைத்தால் உடனடியாக திருமணம் தான் என கேள்விக்கான பதிலுடன் மறைமுகமாக  தனது காதலையும் வெளிப்படுத்தி உள்ளார். அதற்கு பிறகு லதா யார் என விசாரிக்க துவங்கினார் ரஜினி. விசாரித்ததில் அவர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் உறவினர் என தெரிய வந்தது. ஏற்கனவே சினிமாவில் ஒய்.ஜி.மகேந்திராவிற்கும் ரஜினிக்கும் நல்ல நட்பு இருந்ததால், லதா மீது ஏற்பட்ட காதல் குறித்தும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவது பற்றியும் ஒய்.ஜி.மகேந்திராவிடம் நேரடியாக சொன்னார் ரஜினி.


இந்த தகவல்கள் எப்படியோ பத்திரிக்கைகளில் பரவ, பத்திரிக்கையாளர்களை அழைத்து நேரடியாக லதாவை திருமணம் செய்து கொள்ள போவதை அறிவித்தார் ரஜினி. பிறகு மிக எளிமையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள இவர்களின் திருமணம் நடைபெற்றது. அன்று இணைந்த இவர்களின் வாழ்க்கை இன்று வரை மகிழ்ச்சிகரமாக இணை பிரியாமல் சென்று கொண்டிருக்கிறது. திரை தம்பதிகளில் ஆதர்ஷ தம்பதிகள் என்றும் பெயர் வாங்கியவர்கள் ரஜினி - லதா ரஜினி தம்பதி. 


ரஜினியும், லதா ரஜினிகாந்த்தும் தங்களின் 43வது திருமண நாளை பிப்ரவரி 26ம் தேதியான நேற்று வீட்டில் எளிமையாக கொண்டாடி உள்ளனர். அப்போது  அவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோவை இவர்களின் மகன் செளந்தர்யா ரஜினிகாந்த் சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அவர் பதிவிட்டுள்ள கேப்ஷனில், 43 வருடங்களாக அன்பான தம்பதிகளாக, எல்லா சூழ்நிலையில் ஒன்றாக நிற்கும் என்னுடைய அன்பான அப்பா மற்றும் அம்மாவிற்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். 


அது மட்டுமல்ல ஒவ்வொரு திருமண நாளின் போதும் 43 ஆண்டுகளுக்கு முன் லதா ரஜினிகாந்த்தின் வீட்டின் சார்பில் இவர்களுக்கு திருமண பரிசாக வழங்கப்பட்ட மோதிரம், தங்க சங்கிலி ஆகியவற்றை அணிந்து கொள்வது இருவரின் வழக்கமாம். இந்த மோதிரம், சங்கிலி அணிந்தபடி ரஜினியும், லதா ரஜினியும் போஸ் கொடுத்த போட்டோவை தான் செளந்தர்யா பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்