திருச்செந்தூர் : முருகப் பெருமான், சூரனை வதம் செய்து, தேவர்களை காத்த நினைவு கூறும் விழாவே கந்தசஷ்டி விழாவாகும். முருகப் பெருமானின் அவதார நோக்கம் நிறைவேறிய தினமாகும். முருகப் பெருமானை, சிக்கலில் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியில் மகாகந்தசஷ்டி விழா நடத்தப்படும். கந்தசஷ்டி விரதம் இந்த ஆண்டு நவம்பர் 02ம் தேதி துவங்கி, நவம்பர் 07ம் தேதியான இன்று வரை நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி விழா கோலாகமாக நடைபெற்று வந்தது. கோடிக்கணக்கான மக்கள் காப்பு கட்டிக் கொண்டும், வீட்டில் இருந்த படியும் கந்தசஷ்டி விரதம் கடைபிடித்தனர். முருகன், சூரனை வதம் செய்த தலமான திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்தும், நேர்த்திக் கடன் செலுத்தியும் வந்தனர்.
நவம்பர் 05ம் தேதி முருகப் பெருமான், அம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 07ம் தேதியான இன்று நடைபெற்றது. திருச்செந்தூரில் வெற்றி வேல் தாங்கி வந்த ஜெயந்திநாதரும், வேலும் கடற்கரைக்கு எழுந்தருளிய போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை பிளப்பதாக இருந்தது. சூரனை சம்ஹாரம் செய்த பிறகு உற்சவமூர்த்தியான ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு வள்ளி-தெய்வசேனா சமேத முருகப் பெருமானுக்கு சாயாபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நவம்பர் 08ம் தேதியான நாளை இரவு 11 மணியளவில் திருச்செந்தூரில் முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
திருச்செந்தூர் மட்டுமின்றி, திருத்தணி தவிர மற்ற அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. அதே நேரத்தில் முருகப் பெருமான் சினம் தணிந்து அமர்ந்த திருத்தணியில் முருகப் பெருமானுக்கு 36 டன் பலவிதமான மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுகவின் தொடர் வெற்றி.. எதிரணியினருக்கு எரிச்சலா இருக்கு.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Soorasamharam 2024.. அரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருச்செந்தூரில் சூரசம்ஹார கோலாகலம்
தாமரை.. வீடு வீடாக மலரத்தான் போகிறது.. அலறத்தான் போகிறீர்கள்.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம்.. சூப்பரா மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன்
நீங்களால் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை.. லவ் யூ சோ மச் அப்பா.. ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி
திரைக்களம் தொடங்கி.. அரசியல் களம் வரை.. அன்பு நண்பர் கமல்ஹாசனுக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஜப்பானில்.. கோலாகலமாக நடந்தேறியது.. நெப்போலின் மகன் தனுஷ் - அக்ஷயா திருமணம்!
சென்னை உள்பட 11 மாவட்டங்களில்.. இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருக்கு.. குடையோடு போங்க!
ஷாருக்கானுக்கு சட்டிஸ்கரிலிருந்து வந்த கொலை மிரட்டல்.. ஒய் பிளஸ் பாதுகாப்புக்கு உத்தரவு!
{{comments.comment}}