லண்டன்: தொப்பை குலுங்க குலுங்க கை நிறைய பரிசுப் பொருட்களுடன் வந்து சர்ப்பிரைஸ் தரும் கிறிஸ்துமஸ் தாத்தாவைத்தான் நமக்குத் தெரியும். ஆனால் உலக நாடுகள் பலவற்றில் விதம் விதமான பழக்க வழக்கங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கடைப்பிடிக்கப்படுகின்றன. அது தெரியுமா உங்களுக்கு?
கிறிஸ்துமஸ் வந்து விட்டது. ஜிங்கிள் பெல்ஸ்களின் சத்தமும், கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் வீட்டு விஜயமும் களை கட்டியுள்ளன. இயேசு பாலகனின் பிறப்பை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும் விதம் விதமான கிறிஸ்துமஸ் பழக்கங்கள் நடைமுறையில் உள்ளன. எல்லோருக்கும், மிட்டாய், பரிசுப் பொருட்களைத் தரும் கிறிஸ்துமஸ் தாத்தாவைத்தான் உலகம் முழுவதும் பரவலாக எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் ஆஸ்திரியா, ஜெர்மனியில் கிராம்பஸ் என்ற ஒரு உருவம் கிறிஸ்துமஸுக்கு முன்பு வலம் வரும்.
இந்த கிராம்பஸ் அப்படியே கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு நேர் எதிரானவர். அதாவது சாத்தான் உருவத்துடன் கூடியவர் இந்த கிராம்பஸ். இவர் தெருக்களில் உலா வருவார். சேட்டை செய்யும் பிள்ளைகளை இவர் தண்டிப்பாராம். கிராம்பஸ் வருவார், சேட்டை பண்ணாமல் இருங்க என்று குழந்தைகளிடம் கூறுவது இந்த நாடுகளில் வழக்கமாம். கிட்டத்தட்ட நம்ம ஊர் பூச்சாண்டி போலத்தான் இந்த கிராம்பஸும்.
ஸ்வீடன் நாட்டின் காவலே என்ற நகரில் கடந்த 1966ம் ஆண்டு முதல் ஒரு பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அதாவது வைக்கோலில் ஒரு பெரிய ஆட்டை உருவாக்கி அதை ஊரின் முக்கியப் பகுதியில் நிறுவுவார்கள். இதை கிறிஸ்துமஸுக்கு முன்பு சிலர் தீவைத்து எரிப்பார்கள். ஆனால் அந்த வைக்கோல் ஆட்டைப் பாதுகாக்க போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள். கிறிஸ்துமஸ் முடிந்ததும் இந்த ஆடு அகற்றப்படுமாம்.
ஜப்பானில் கிறிஸ்துமஸை மத விழாவாக் கொண்டாடுவதில்லை. மாறாக குடும்பத்தினருடன் கூடி கென்டகி பிரை சி்கன் விழாவாக கொண்டாடுகின்றனர். 70களில் கேஎப்சி இந்த நாட்டுக்கு வருகை தந்ததை கொண்டாடும் வகையில் இந்த கென்டகி பிரைட் கிறிஸ்துமஸ் அங்கு கொண்டாடப்படுகிறதாம். பெரும்பாலான வீடுகளில் அன்று கென்டகி பிரைட் சிக்கன் சாப்பிடுவது வழக்கமாம்.
அமெரிக்காவில் வீடுகளில் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரங்களில் பிக்கிள் வடிவிலான ஒரு ஆபரணத்தை மறைத்து வைப்பார்கள். அதைக் கண்டுபிடிக்கும் குழந்தைகளுக்கு ஒரு பரிசு தருவார்களாம். குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் விளையாட்டு இது.
வென்சூலா நாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில், மக்கள் ரோலர் ஸ்கேட்டர் மூலமாக சர்ச்சுக்குச் செல்வார்களாம். இதற்காகவே சர்ச் உள்ள சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும். ரோலர் ஸ்கேட்டர்களுக்கு வசதியாக இந்த ஏற்பாடாம். அதிகாலையிலேயே ரோலர் ஸ்கேட்டரில் மக்கள் சர்ச்சுக்குச் செல்வது பார்க்கவே வித்தியாசமாக இருக்கும்.
இப்படி உலகம் முழுவதும் விதம் விதமாக கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். மத விழாக்கள் அனைத்தும் கடவுளுக்காக மட்டுமல்ல.. நமது மகிழ்ச்சிக்காகவும்தானே.. நாமும் இணைந்து கொண்டாடி மகிழ்வோம்!
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}