டெல்லி: ஜூனியர் வைஃப் தேவை என்று லிங்க்ட்இன் தளத்தில் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர் கொடுத்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பேசும்போதும் சரி, எழுதும்போதும் சரி.. வார்த்தை.. அந்த வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பலரும் லூஸ் டாக்கில்தான் சிக்கி சங்கடங்களைச் சந்திப்பார்கள். அப்படி ஒருவர் சிக்கி வறுபட்டு வருகிறார்.
அவரது பெயர் ஜிதேந்திரா சிங். இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். இவர் தனது லின்க்ட்இன் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்த வார்த்தைதான் இப்போது சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள பெண் தேவை என்பதைத்தான் அவர் வில்லங்கமாக சொல்லியிருந்தார். அதை அவர் கொடுத்திருந்த விதத்தைப் பாருங்களேன்
#hiring அவசரம்
எனது வாழ்க்கையில் இணைவதற்கு ஒரு "Junior Wife" தேடிக் கொண்டிருக்கிறேன்.
குறிப்பு - அனுபவம் வாய்ந்த கேன்டிடேட் ( Wifes ) இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம். அவர்களை நான் பின்னர் தனியாக சந்தித்துக் கொள்கிறேன்.
வேலை வகை: வாழ்க்கை முழுவதும்
கெரியர் லெவல் - என்ட்ரி லெவல் (முற்றிலும் அனுபவம் இல்லாதவர்கள் மட்டுமே தேவை)
சம்பளம் - ரகசியம்
மொத்தம் 3 சுற்றுக்களாக நேர்முகத் தேர்வு நடைபெறும். இறுதிச் சுற்று - நேருக்கு நேர்.
தேவையானவை
- சமையலில் குறைந்தது 2 ஆண்டு அனுபவம் தேவை.
- இரவில் எழுந்து, எனக்கு மணக்க மணக்க பிரியாணி செய்து கொடுக்கக் கூடிய திறமை இருக்க வேண்டும்
- நல்ல தகவல் தொடர்பு திறமை இருக்க வேண்டும்
-- மரியாதைக்குரியவராக, நாகரீகமானவராக இருக்க வேண்டும்
- கீழ்ப்படிதல் அவசியம், அன்பு செலுத்துபவராக இருக்க வேண்டும்
- கோல் ஓரியன்டட் ( நான் என்னெல்லாம் வேலை செய்கிறேனோ அதையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்)
விருப்பமானவர்கள், எனது இன்பாக்ஸுக்கு சுயவிவரத்தை அனுப்பி வைக்கலாம் என்று அந்த நபர் கூறியுள்ளார். இந்த விளம்பரம்தான் பலரையும் கடுப்பாக்கியுள்ளது.
என்ன முட்டாள்தனம் இது என்று பலரும் அவரை சாடி வருகின்றனர். மிகவும் தொழில்முறையிலான தளமான லிங்க்ட்இன் எப்படி இதையெல்லாம் அனுமதிக்கிறது. இதுபோன்ற முட்டாள்தனத்தை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் போய் காட்டட்டும்.. இங்கு ஏன் என்று பலரும் சாடியுள்ளனர். ஆனால் ஜிதேந்திரா சிங்கோ, இது ஜாலியான பதிவுதான். சீரியஸாக எடுத்துக்காதீங்க என்று கூறியுள்ளார்.
அது சரி, தம்பி நீங்க ராத்திரி நினைச்ச நேரத்துக்கு பிரியாணி கேட்டா உடனே அடிச்சு பிடிச்சு, தலை முடியை அள்ளி முடிஞ்சு, விறுவிறுன்னு கிச்சனுக்கு ஓடிப் போய் செஞ்சு கொடுப்பாங்கன்னு பத்தாம்பசலித்தனமாக நம்பறீங்க பாருங்க.. அங்கதான் நீங்க நிக்கறீங்க.. 20 வருஷத்துக்கு பின்னாடி போய்!
திருந்துங்க பாஸ்.. திருந்துனா போனா போகுது பாவம்ன்னு டீயாவது போட்டுத் தருவாங்க.. இப்படியெல்லாம் சாவனிஸ்ட்டா பேசிட்டிருந்தா. பேரீச்சம்பழம் கூட வாங்கித் தர மாட்டாங்க.. ப்ரோ!
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}