வாட்ஸ்ஆப், டிவிட்டர், பேஸ்புக்.. சோசியல் மீடியா பக்கங்களை.. மொத்தமாக ஆக்கிரமித்த "கேப்டன்"

Dec 28, 2023,06:56 PM IST

சென்னை:  வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து சோசியல் மீடியாக்களிலும் விஜயகாந்தின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்தும், அவர்களுடைய நினைவுகளை பரிமாறியும் மக்கள் விஜயகாந்த்தின் நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.


கம்பீரமான நடை, நேர்கொண்ட பார்வை, எதற்கும் தளராத மனம், அனைவரிடமும் அன்பாக பழகும் எளிமை, தாய்மை உள்ளம் படைத்த கர்ணன்.. என பல சிறப்புகளை பெற்ற கேப்டன் விஜயகாந்த் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.




இந்த செய்தி கேட்டு திரை நட்சத்திரங்கள், கட்சித் தொண்டர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சோகத்தில் மூழ்கினர். யாராலும் வெறுக்க முடியாத அரசியல் தலைவராக  வலம் வந்தவர் விஜயகாந்த். நல்ல உள்ளம் படைத்த விஜயகாந்தை.. நாம் இழந்து விட்டோமே.. இனி ஒரு பிறவியிலும் இதுபோன்ற மனிதரை நாம்மால் பார்க்க முடியுமா.. என்று பலரும் தங்களின் வேதனைகளையும், வருத்தங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.


சமூக வலைதளங்கள் அனைத்திலும் கேப்டன்தான் நீக்கமற நிறைந்துள்ளார். பலரும் தங்கள் வாட்ஸ் அப் டிபி களில் விஜயகாந்த் புகைப்படத்தை வைத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர் நடித்த படங்களின்  சிறப்புகளைப் பேசியும், அவர் நடித்த படங்களின் வசனங்களை பற்றியும் சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர்.


வாட்ஸ் ஆப் குரூப்கள் அனைத்திலும் வழக்கமான பகிர்வுகளை நிறுத்தி விட்டு விஜயகாந்த் குறித்து மட்டுமே பலரும் பகிர்ந்து வருகின்றனர். அவரது படங்களில் இடம் பெற்ற பாடல்கள், வசனங்கள் உள்ளிட்டவற்றை ஷேர் செய்கின்றனர்.




ரமணா படத்தில் அவர் கிளைமேக்ஸ் காட்சியில் பேசும் வசனத்தை பலரும் ஷேர் செய்கிறார்கள். அதேபோல பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் வரும் விஜயகாந்த்தின் மரணக் காட்சியையும் பலர்  ஷேர் செய்து வருகிறார்கள்.


பேஸ்புக்  பக்கங்கள், ட்விட்டர் பக்கங்கள் என அனைத்து சோசியல் மீடியாக்களிலும்  விஜயகாந்த்தான் நீக்கமற நிறைந்திருக்கிறார்.  பொது மக்கள் கூடும் டீக்கடை, வணிகதலங்கள் உள்பட எங்கு பார்த்தாலும் விஜயகாந்த் குறித்த பேச்சுதான் அதிகம் உள்ளது. 

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்