சென்னை: புடவை கட்ட தெரியுதோ இல்லையோ, ஆனால் புடவை பிடிக்காத, அதுவும் பட்டுப் புடவை பிடிக்காத பெண்கள் இருக்கவே முடியாது. ஆண்களுக்குமே கூட பெண்களை புடவையில் பார்க்கத்தான் பிடிக்கும். சேலைக்கே உரிய மவுசு அது.
புடவைகளில் பட்டுப் புடவை, சில்க் காட்டன், காட்டன் வகைகள், சின்தடிக் வகைகள் இருப்பது தான் நமக்கு தெரியும். இவற்றை மட்டுமே கட்டி கட்டி போரடிக்குது. இந்த ஆண்டு தீபாவளிக்கு புதுசா ஏதாவது டிரை பண்ண வேண்டும் என நினைக்கிறீர்களா? அப்போ வாங்க புடவை வெரைட்டிகளை அலசி பார்த்துடலாம்.
இந்தியாவின் பாரம்பரிய உடை என்றால் அது புடவை தான். இது உலகத்துக்கே தெரியும். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கலாச்சாரம், பாரம்பரியம் மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்திற்கும் பாரம்பரிய புடவை என்றும் ஒன்றும் இருக்கிறது. இது பலருக்கும் தெரியாத ஒன்றாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஸ்பெஷலான ஒரு புடவை ரகம் நம்ம இந்தியாவுல மட்டும் தான் இருக்கும்.
உண்மைதாங்க.. மகாராஷ்டிராவில் ஒரு வகையான புடவை இருக்கு. கேரளாவில் வேற மாதிரி கட்டுவாங்க.. ஆந்திரா பக்கம் போனா அங்க ஒரு டிசைனில் சேலை இருக்கும். அப்படியே ஒடிசா, மேற்கு வங்கம் என்று இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் சேலைகள் விதம் விதமாக டிசைன் டிசைனாக கலக்கிக் கொண்டுள்ளன.
என்னங்க நம்ப முடியலியா? இதோ உங்களுக்காக மாநில வாரியாக ஸ்பெஷல் ரக புடவைகள்...
மாநில வாரியாக புடவை ரகங்கள் :
1. பனாரஸ் புடவை - உத்திர பிரதேசம்
2. காஞ்சிபுரம் புடவை - தமிழ்நாடு
3. சந்தேரி புடவை - மத்திய பிரதேசம்
4. டன்ட் புடவை - மேற்கு வங்கம்
5. படோலா புடவை - குஜராத்
6. பைதானி புடவை - மகாராஷ்டிரா
7. சம்புரி புடவை - ஒடிசா
8. பந்தானி புடவை - ராஜஸ்தான் மற்றும் குஜராத்
9. கசாவு புடவை - கேரளா
10. பூசம்பள்ளி புடவை - தெலுங்கானா
11. பகல்புரி புடவை - பீகார்
12. மைசூர் சில்க் புடவை - கர்நாடகா
13. கோடா தோரி புடவை - ராஜஸ்தான்
14. லெஹாரியா புடவை - ராஜஸ்தான்
இத்தனை ரகமான புடவை வெரைட்டி இருப்பதை கேட்பதற்கும், வாங்கி உடுத்திக் கொள்வதற்கும் ஆசையாக தான் இருக்கு. ஆனால் இத்தனை வகைகளையும் எங்கு போய் தேடி அலைந்து வாங்குவது என யோசிப்பவர்களுக்கு குட்டி டிப்ஸ்.. இருக்கவே இருக்கு நம்ம தி. நகர்.
தீபாவளிக்கு மட்டும் இந்த ஏரியா தீ நகராக மாறி விடும்.. அதாவது தீபாவளி நகர். இங்கு இருக்கும் ஜவுளிக் கடைகளை முழுசா போய் முடிக்கேவ சில நாட்களாகும். அத்தனை கடைகள் இருக்கு. இந்த தீபாவளிக்கு நம்ம புன்னகை இளவரசி நடிகை ஸ்நேகா நடத்தி வரும் ஸ்நேகாலயா சில்க்ஸ் கடையும் சேர்ந்திருக்குங்க. மேற்கண்ட சேலைகள் மட்டுமல்லாமல், இன்னும் பல பல வெரைட்டி புடவைகளை இங்கு குவித்து வைத்திருக்கிறார்கள். இதை அவர்களே தங்களின் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். வெளியூரில் இருப்பவர்களின் வசதிக்காக ஆன்லைன் ஷாப்பிங் வசதியும் வச்சிருக்காங்களாம்.
தி.நகரில் உள்ள கடைகளுக்கெல்லாம் விசிட் அடித்து வாங்க முடியாதவர்களுக்காக இப்போது ஆன்லைனிலேயே பலரும் சேலைகளை விற்பனை செய்கிறார்கள்.. பிறகென்ன ஒன்னுக்கு ரெண்டா வாங்கிக் கொடுங்க.. உங்க வீட்டுக்காரம்மாவுக்கு!
புகைப்படங்கள்: ஸ்நேகாலயா சில்க்ஸ், தி.நகர், சென்னை
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}