நடிகை சோனாவின் ஸ்மோக்.. சொந்த வாழ்க்கையையே கதையாக்கி.. இயக்கியும் அசத்தல்!

Mar 28, 2024,01:57 PM IST

சென்னை: நடிகை சோனா தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு உருவாக்கியுள்ள ஸ்மோக் என்ற வெப்சீரிஸில் இயக்குனராகவும் களமிறங்கி அசத்தியுள்ளார்.


தமிழ் திரை உலகில் நடிகையாக  ஒரு சுற்று சுற்றி வந்தவர்  நடிகை சோனா. இவர் ஒரு காஸ்டியூம் டிசைனர். இவர் 2002 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றவர். இவர் கோலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கவர்ச்சியில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் கலக்கியவர். 




2008 ஆம் ஆண்டு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த குசேலன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தலான பெயரைப் பெற்றவர் நடிகை சோனா. இது தவிர சென்னையில் யுனிக் என்ற துணிக்கடையை நடத்தி தொழில் துறையிலும் சிறந்து விளங்கி வருகிறார். ஒரு சிறந்த நடிகையாகவும் தொழிலதிபராகவும் விளங்கிய நடிகை சோனா தற்போது ஷார்ட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள ஸ்மோக் என்கிற வெப் சீரியஸின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.


இந்த வெப் சீரிஸ் இவருடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு உருவாகி உள்ளதாம். அதனால் இந்த வெப்சீரிஸ் பல சீசன்களாக வெளியாக இருக்கிறதாம். இதில் தன்னுடைய சொந்த  கதாபாத்திரத்தில் தானே நடிக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

இதில்  ஆதினி (5 வயது), ஜனனி (14 வயது) மற்றும் ஆஸ்தா அபய் ( 30 வயது) ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.




ஸ்மோக் சீசன் 1 வெப்சீரிஸ் நிறைவடையும் தருவாயில் உள்ளதாம். அதனால்  இந்த வெப்சீரிஸ் வரும் கோடை விடுமுறை நாட்களில் ஷார்ட் ஃபிலிம்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவித்துள்ளது. இதில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் சமீபத்தில் யுனிக் ப்ரொடக்க்ஷன் வெளியிட்டபோது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. நடிகை சோனாவின் வாழ்க்கை அனுபவங்களை மையப்படுத்தி இந்த வெப்சீரிஸ் உருவாகி இருப்பதோடு, அவரே அந்த கதாபாத்திரத்தில் நடித்தும் இருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இது பற்றி நடிகை சோனா கூறுகையில், புகை படர்ந்த கனவுகள் நிறைந்த வாழ்க்கையில், என்னவென்றே தெரியாத இடங்களுக்கோ அல்லது சூழல்களுக்கோ வாழ்க்கை எங்கே என்னை அழைத்து செல்லும் நிலையில் சரியாக என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. என்னுடைய கதையை சொல்வதால், கேட்கப்பட்ட கேள்விகள் அல்லது மறந்துபோன கேள்விகள், ஒளிந்துள்ள உண்மைகள் அல்லது சொல்லப்படாத உண்மைகள் குறித்து இதை இயக்கியுள்ளதுடன் அதில் அனைத்திலும் ஒரு பாகமாகவும்  இருந்தேன். என் வாழ்க்கைக்குள் வந்து என்னை பாருங்கள் என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்