சென்னை: ஸ்மார்ட் போன்களை அன்லாக் செய்ய கைரேகை, கருவிழியைப் பயன்படுத்துவது போல நம்மோட மூச்சுக் காற்றையும் பயன்படுத்தாலம் என்று சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகள், ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில் எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கிய அங்காக வகித்து வரும் ஸ்மார்ட் போன்கள் குறித்த ஒரு முக்கிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அதாவது மனிதனின் மூச்சுக்காற்றைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போனை அன்லாக் செய்யும் வழிமுறைகளை கண்டறிந்து வருகின்றனர்.
நுரையீரலில் இருந்து வெளியேறும் மூச்சுக் காற்றில் உள்ள ஏற்ற இறக்கங்களின் வேறுபாடுகளை வைத்து ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனை பிரித்து அடையாளம் காண்பது சாத்தியம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது கைரேகை, கருவிழிப்படலம் உள்ளிட்டவற்றை வைத்து நாம் அன்லாக் செய்கிறோம், அட்டென்டன்ஸ் வைக்கிறோம்.. இன்ன பிற பயன்பாடுகளுக்கும் இது பயன்படுகிறது. காரணம், இவை ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசப்படும். இந்த தனித்துவம், நமது மூச்சுக்காற்றுக்கும் இருக்கிறதாம். எனவே, மூச்சுக் காற்றையும் பயன்படுத்தி மெட்ரிக் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை பயோமெட்ரிக் கையொப்பமாகவும் பயன்படுத்தும் ஒரு முறையை பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா தலைமையிலான குழு உருவாக்கியுள்ளனர். சுமார் 94 பேரிடம் இருந்து சுவாச மாதிரிகளை எடுத்து சோதனை நடத்தினர். அதில் 97 சதவீத துல்லியத்துடன் சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தை சரியாக உறுதிபடுத்தியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், ஒருவரை அடையாளம் தெரியாத நிலையில் காணும்போது துல்லியத்தன்மை பாதியாக குறைகிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
எனவே இந்த தொழில்நுட்பத்தில் இன்னும் முன்னேற்றத்தை கண்டறிய தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜப்பானில் உள்ள கியூஷூ பல்கலைக்கழகத்திலும் இதே போன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி, சுவாசத்தை பயன்படுத்தி ஸ்மார்ட் ஃபோன்களை திறப்பதற்கு மட்டுமின்றி பயோ மெட்ரிக் தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமானதாகவும் கருதப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளச் சான்றுகளை உருவாக்க முடியும் என்றும் கூறியள்ளனர். வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் அடுத்த படி தான் இந்த மூச்சு காற்று தொழில் நுட்பம். இனி போனைத் தொடவே வேண்டாம்.. மூச்சை இழுத்து விட்டா போதும்.. அதுவாவே ஓபன் ஆகிக்கும்.. சூப்பர்ல!
Cyclone Fengal: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 11 மாவட்டங்கள்!
கனமழை எதிரொலி.. கடலோர மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்கவும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
புயல் எங்கு எப்போது கரையைக் கடக்கும்.. IMD சென்னை தலைவர் பாலச்சந்திரன் சொல்வது என்ன?
திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறில்லை.. அவரது எழுச்சி பிரமாதமாக இருக்கிறது.. நடிகர் பார்த்திபன்
Heavy rain alert.. சென்னையில் 8 ஆவின் பாலகங்கள்.. 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு!
Healthy Soups.. ஜிலுஜிலு மழைக்கேற்ற.. சூப்பரான கமகம வெஜிட்டபிள் சூப்.. செமையா இருக்கும்!
Cyclone Fengal.. நாளை உருவாகிறது புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்
அதே இடம்.. அதே புயல்.. OMG.. 99 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் Depression!
Chennai Rains.. சென்னையில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
{{comments.comment}}