மாணவர்களுடன் உறவு.. அடுத்தடுத்து 6 டீச்சர்கள் கைது.. அமெரிக்காவில் பரபரப்பு!

Apr 16, 2023,05:02 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கடந்த 2 நாட்களில் 6 பெண் ஆசிரியைகள் அடுத்தடுத்து கைதாகியுள்ளது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் கென்டகியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், 16 வயதான 2 சிறார்களுடன் உறவு வைத்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. 


டேன்வில்லியைச் சேர்ந்த எல்லன் ஷெல் (38),  ஆர்கன்சாஸைச் சேர்ந்த ஹெதர் ஹரே, ஓக்லஹாமாவைச் சேர்ந்த எமிலி ஹான்காக், ஐயாவாவைச் சேர்ந்த கிறிஸ்டன் கான்ட் (36), விர்ஜீனியாவைச் சேர்ந்த அல்லியா கெர்டமான்ட் (33),  ஹன்னா மார்த் ஆகியோரே கைது செய்யப்பட்ட ஆசிரியைகள் ஆவர். 




இதில் எல்லன் ஷெல், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு சிறுவனுடனும், ஆகஸ்ட் மாதத்தில் இன்னொரு சிறுவனுடனும் உறவு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இவர் உட்லான் என்ற தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்தார்.  


ஆர்கன்சாஸ் ஆசிரியை ஹெதர் ஹரே ஒரு மாணவனுடன் தவறான உறவு வைத்திருந்தது தெரிய வந்து கைது செய்யப்பட்டார். அந்த சிறுவன் மைனர் வயதுடையவன் ஆவான்.


ஆசிரியை எமிலி ஹான்காக்  மாணவனுடன் கட்டாய உறவு வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இவர் வெல்ஸ்டன் பப்ளிக் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை.


36 வயதான ஆசிரியை கிறிஸ்டன் கான்ட், சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி தனது மாணவனை திசை திருப்பி அவனுடன் உறவு வைத்துக் கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி வளாகத்திலேயே இவர் தனது செக்ஸ் உறவை வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. கிறிஸ்டின் கான்ட் ஆங்கில ஆசிரியை ஆவார். ஒரே மாணவனுடன் பள்ளி வளாகத்திற்குள் இவர் 5 முறை உறவு கொண்டுள்ளார்.


விர்ஜீனியாவைச் சேர்ந்த அல்லியா கார்டெமன்ட்  பல மாதங்களாக ஒரு மாணவனுடன் உறவு வைத்துள்ளார். இவர் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கான ஆசிரியை ஆவார்.  இவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 


உடற்பயிற்சி ஆசிரியையான ஹன்னா மர்த் ஒரு ஜாவலின் பயிற்சியாளரும் ஆவார்.  இவர் கடந்த 2021ம் ஆண்டு  மைனர் வயதுடைய மாணவனுடன் உறவு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


அமெரிக்காவில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 6 ஆசிரியைகள் பாலியல் புகார்களில் சிக்கி கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்