எஸ்கே புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்தினால்.. சட்ட நடவடிக்கை.. சிவகார்த்திகேயன்

Oct 02, 2024,03:33 PM IST

சென்னை: எஸ்கே புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று  சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது.


தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகாராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கொன்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தனது எதார்த்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நடிப்பு மட்டும் இன்றி சிவகார்த்தகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான், குரங்கு பெடல், கொட்டுக்காளி  போன்ற திரைப்படங்கள் தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பு நிறுவனம் பெயரில் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இந்த நிலையில், அது போலியானது என்றும், மேலும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,




எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.


இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.


சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்