Amaran movie.. சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த சூப்பர் கெளரவம்.. அசத்திய ராணுவ பயிற்சி மையம்

Nov 28, 2024,03:46 PM IST

சென்னை: அமரன் திரைப்படத்தில் மறைந்த ராணுவ வீரர் முகுந்த வரதராஜனாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் கெளரவம் செய்துள்ளது.


கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது அமைந்துள்ளது. 




இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியான 3 நாட்களிலேயே  உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது இதன் வசூல் 350 கோடியை நெருங்கி வருகின்றது. கடந்த 2014ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தனது இன்னுயிரை தியாகம் செய்தார் மேஜர் முகுந்த் வரதராஜன். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.




இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆர்மி பயிற்சி அகாடமியில் சிவகார்த்திகேயன் பயிற்சி பெற்றதாகவும், துப்பாக்கி எப்படி பிடிப்பது,எப்படி சுடுவது என்பதற்காக பயிற்சி பெற்ற பிறகு தான் படத்தில் நடித்ததாக அவரே பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் கதையை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்து அனுமதி வாங்கி பிறகு தான் திரையரங்குகளில் வெளியிட்டு இருந்தார்களாம். 


இந்நிலையில் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியை சேர்ந்த அதிகாரிகள் அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மிகச் சிறப்பாக நடித்தார் என்று கூறி அவரை கெளரவித்து பாராட்டியுள்ளனர். இந்த கெளரவத்தால் தான் நெகிழ்ச்சி அடைந்திருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்