கால் மேல கால் போட்டு.. நியூஸ் பேப்பர் படிக்கிறவரா நீங்க... அப்ப இது உங்களுக்குத்தான்!

Oct 28, 2023,06:29 PM IST

- மீனா


கால் மேல் கால் போட்டு அமருவது.. இது ஆறு வயசு முதல் 60 வயசு வரை எல்லோரிடமும் காணப்படும் ஒரு பழக்கம். இது மரியாதைக்குறைவானது என்று நம்ம ஊர்களில் சொல்வார்கள்.. அதேசமயம், வட இந்தியாவில் கால் மேல் கால் போட்டு அமருவதை கெத்தாக பார்க்கிறார்கள்.


அப்போ இருந்த 80ஸ் கிட்ஸ் முதல் இப்போது உள்ள 2k கிட்ஸ் வரை ஆண்கள், பெண்களிடம் பேஷனாக பார்க்கப்படுவது என்றால் அது கால் மீது கால் போட்டு அமருவது தான். சொல்லப்போனால் கால் மீது கால் போட்டு அமருபவர்கள்  தான்  மிகவும் அழகு, கம்பீரம், தைரியமானவர்கள் என்றும், அவர்கள் தான் கெத்து என்றும், திமிர் பிடித்தவர்கள் என்றும் (தேவையே இல்லாத) ஒரு போலியான அபிப்பிராயம்  உருவாகிக் கொண்டிருக்கிறது.




ஏனென்றால் பல திரைப்படங்களில் நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி கால் மீது கால் போட்டு அமரும் காட்சியில் அவர்களை மாஸாக   காட்டுவதால், இவ்வாறு நாமும் இருந்தால் தான் நமக்கும் மற்றவர்கள் மரியாதை தருவார்கள் என்று அநேகர் எண்ணிக் கொண்டிருக்கிறோம். பொதுவாக 62% பேர் இடது கால் மீது வலது கால் போட்டு அமரும் பழக்கமுடையவர்களாகவும், அதே 26 சதவீதம் பேர் வலது காலின் மீது இடது காலை போட்டு அமரும் பழக்கம் உடையவர்களாகவும்  இருப்பதாக சொல்லப்படுகிறது.


மேலோட்டமாக நம் பெரியோர்கள் கால் மீது கால் போட்டு உட்காருவது ஒழுங்கீனம் என்றும் அதுவே பெரியவர்கள் முன் உட்கார்ந்தால் அது மரியாதை குறைச்சல் என்று சொல்லிட்டு போனதுனால நீங்க எதை செய்யக்கூடாது என்று சொல்வீர்களோ அதை தான் நாங்கள் செய்வோம் என்று அநேகர் கால் மீது கால் போட்டு அமரும் பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். பெண்களை மட்டும் இப்படி சொல்வதில்லை ஆண்களும் கால் மீது கால் போட்டு அமரும்போது அவர்களையும் தெனாவட்டுகாரன், அகங்காரம் கொண்டவன், திமிர் பிடித்தவன்  என்றெல்லாம் சொல்வதுண்டு.




ஆனால் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது என்று சொல்வதற்கு அறிவியல் ரீதியான ஒரு காரணம் பார்க்கப்படுகிறது. கால் மீது கால் போட்டு அமர்வது ஒழுங்கீனம், அகங்காரம், திமிரு, மரியாதை குறைச்சல் என்று பெரியவர்கள் மேலோட்டமாக சொல்லி வச்சாலும் அதனுடைய உள் பொருள் வேறு..  பெண்கள் கால் மீது கால் போட்டு அமரும் போது கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக அமைவதில்லை. நாளடைவில் கால் பகுதியில் வெரிகோஸ் வெயின் என்று சொல்லப்படுகிற நரம்பு சுருட்டல் பிரச்சனை வரவும், கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.  


நம் முன்னோர்கள் கால் மீது கால் போட்டு அமர்வதால் ஏற்படும் தீமையை வாழ்வியல் விஷயங்களோடு இணைத்து சொல்லியிருப்பதினால் அதையெல்லாம் நாங்கள் பின்பற்ற முடியாது என்ற கண்ணோட்டம் இன்றும் எல்லாரிடமும்  பரவலாக  காணப்படுகிறது. கால் மீது கால் போட்டு அமர்வது என்பது ஒழுங்கீனம் ,

தலைக்கனம் திமிர்பிடித்தவர்கள் என்று அடையாளப்படுத்துவது நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் மட்டுமே. வட இந்தியாவில் கால் மீது கால் போட்டு அமர்வதை யாரும் தவறாக எடுத்துக் கொள்வது கிடையாது. அந்த விஷயத்தை ஒரு பொருட்டாகவும் யாரும் மதிப்பதும் கிடையாது. வெளிநாட்டில் கூட கால் மீது கால் போட்டு அமர்வதை யாரும் ஒரு விஷயமாக எடுத்துக் கொள்வது இல்லை. ஏனென்றால் அனேக வெளிநாட்டினர் எப்பொழுதுமே கால் மீது கால் போட்டு அவர்கள்  வசதியாக அமர்வதை விரும்புகிறார்கள். காலில் மரியாதை இருப்பதாக அவர்கள் நினைப்பதில்லை. 


சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சியின் படி கால் மீது கால் போட்டு அமர்வதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஆண்களை விட பெண்களை தான் அதிகமாகவும் பாதிக்கிறது என்றும் செல்லப்படுகிறது. எப்படி என்றால் கால் மீது கால் போட்டு அமரும்போது அடி வயிரில் அழுத்தம் ஏற்பட்டு கர்ப்பப்பைக்கு செல்லும் ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் சீராக செல்லாமல் கர்ப்பப்பையில் பிரச்சனை உருவாகி கருத்தரிக்கும் வாய்ப்புகள் கூட குறைவதாகவும், கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் ஆராய்ச்சியின் முடிவுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அது மட்டும் இல்லை .. மூட்டு பகுதியின் பின்பகுதியில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஆங்காங்கே இரத்தம்  உறைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும் இவ்வாறு தொடர்ந்து அமர்வதினால் இடுப்பு மற்றும் கீழ் முதுகிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு முதுகு வலி உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் கால் மீது கால் போட்டு நாம் அமரும்போது நேராக அமராமல் உடலை வளைத்து சீரற்ற அமைப்பில் அமர்ந்திருப்பதால் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு உடல் அமைப்பே மாறிவிடும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம் ,மூட்டு வலி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஆண்கள் இவ்வாறு அமர்வதினால் விதைப்பையில் வெப்பம்  அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


அவ்வபோது கால் மீது கால் போட்டு அமர்வதால் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லும் மருத்துவர்கள் இதைத் தொடர்ந்து செய்யும்போது இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்பதையும் சொல்லி நம்மை எச்சரிக்கிறார்கள். ஆகையால் இனிமேலாவது நம் முன்னோர்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயத்திலும் காரணம் இருக்கிறது என்பதை உணர்ந்து அதை கடைபிடிக்க நம்மை பழக்கப்படுத்திக் கொள்வோமே.


ஸோ.. காலில் மரியாதை இல்லை.. நம்மோட ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது.. எனவே அதை மடக்கி, முடக்காமல் நீட்டி நிமிர்ந்து அழகாக அமர்ந்து எதையும் செய்யலாமே!

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்