பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தருக்கு என்னாச்சு.. நல்லாதானே இருந்தார்.. ஏன் இந்த விபரீத முடிவு?

Mar 05, 2025,05:36 PM IST

ஹைதராபாத் : பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை மூலம் உயிரை மாய்க்க முயன்றதாக சொல்லப்படுகிறது.


பிரபல பின்னணி பாடகியான கல்பனா ராகவேந்தர், முன்னணி பாடகர் டி.எஸ்.ராகவேந்தரின் மகள். இவர் ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இவரது வீடு கடந்த இரண்டு நாட்களாக திறக்காமல் பூட்டி இருந்துள்ளது. அவரை போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு நிர்வாகத்தினர் சென்னையில் இருக்கும் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


இருந்தாலும் தொடர்ந்து கல்பனாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்த குடியிருப்பு நிர்வாகம், போலீசாரின் உதவியுடன் கல்பனாவின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு மயக்க நிலையில் இருந்த கல்பனாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




தற்போது கல்பனாவிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு அவர் தற்கொலை மூலம் உயிரை மாய்க்க முயன்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


கல்பனா, பல ஹிட்டான பாடல்களை தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பாடி உள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் அவர் பணியாற்றி உள்ளார். அவர் 2010ம் ஆண்டு மலையாளத்தில் ஸ்டார் சிங்கர் பட்டத்தையும் வென்றுள்ளார். 5 வயதில் தன்னுடைய இசை பயணத்தை துவங்கிய கல்பனா 1500 பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி உள்ளார்.  போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக் கணக்கு பாடல்தான் கல்பனா பாடிய முதல் பாடலாகும். அந்தப் பாடலே அவரது அடையாளமாக இன்று வரை உள்ளது.


1986ம் ஆண்டு கமல் நடித்த புன்னகை மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் அறிமுகமாகி உள்ளார். தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனில் இவர் போட்டியாளராக கலந்த கொண்டுள்ளார். இவர் பாடிய பாடல்களில் மாமன்னன் படத்தில் "கொடி பறக்குற காலம்" , 36 வயதினிலே படத்தில் "நான் போகிறேன்" ஆகிய பாடல்கள் சமீப காலத்தில் ஹிட் ஆன பாடல்கள் ஆகும்.


மிகவும் கலகலப்பாக இருக்கக் கூடியவர் கல்பனா. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டித் தொடரில் நடுவராக பங்கேற்றப்போது அவர் மிகவும் ஜாலியாக பங்கேற்பார். பேசுவார். அப்படிப்பட்டவருக்கு என்ன பிரச்சினை இப்படி ஒரு முடிவை எடுக்கும் அளவுக்கு என்ன மன அழுத்தத்தில் அவர் இருந்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொகுதிகள் மறு வரையறையை 30 வருடத்திற்குத் தள்ளி வையுங்கள்.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

news

வெயில் காலங்களில்.. சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.. சூப்பராக வந்த ஹேப்பி நியூஸ்!

news

தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது.. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!

news

விகிதாச்சாரம் குறையக்கூடாது.. அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு இது.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட தேவை எழுந்துள்ளது.. விசிக தலைவர் திருமாவளவன்..!

news

ஹலோ.. இன்னிக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க.. வெளில வெயிலைப் பார்த்தீங்கள்ள.. கவனம்!

news

அஜீத், கமல்ஹாசன் வழியில் நயன்தாரா.. லேடி சூப்பர்ஸ்டாரை துறந்தார்.. அடுத்து ரஜினிகாந்த்தா?

news

பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தருக்கு என்னாச்சு.. நல்லாதானே இருந்தார்.. ஏன் இந்த விபரீத முடிவு?

news

தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை.. பெரும் தண்டனையே.. விஜய் அறிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்