- மஞ்சுளா தேவி
சென்னை: நடிகர், இயக்குனர், பாடகர், நடன கலைஞர், பாடல் ஆசிரியர் என பன்முகம் திறமை கொண்ட சிலம்பரசன் என்ற சிம்பு என்ற எஸ்டிஆர், தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்து சிக்கென்ற புதிய தோற்றத்திற்கு மாறி அசத்தியுள்ளார்.
தனது தந்தை டி.ராஜேந்தர் வழியில் பல கலை வித்தகராக வலம் வருகிறார் சிம்பு. தந்தை இயக்கிய பல படங்களில் சிம்பு சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாகவும் , குணசத்திரம் வேடங்களிலும் நடித்து உள்ளார். தனது பேச்சாலும் நடிப்பாலும் மக்கள் மனதை ஈர்த்தவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே நிறைய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு எஸ் டி ஆர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். அப்பா இயக்கிய காதல் அழிவதில்லை படத்தில் நாயகனாக அறிமுகமானார் சிம்பு. பின்னர் இவர் நடித்த ஒரு சில படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் ஹரி இயக்கத்தில் வெளிவந்த கோவில் படம் மாபெரும் வெற்றி பெற்றது .இதில் நடிகர் வடிவேலின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து வெளிவந்த மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, சிலம்பாட்டம், வானம் , மாநாடு போன்ற படங்கள் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்தது. மாநாடு 100 கோடியைத் தாண்டி வசூலித்து சாதனை படைத்தது.
சிம்பு தற்போது கொரோனா குமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்புவின் 48வது படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும், இப்படம் சிம்புவுக்கு திரையுலகில் ஒரு மைல் கல்லாகவும் அமையும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்து சிக்கென்று மாறியுள்ளார் சிம்பு. சமீபத்தில் சிம்பு உடல் எடையை அதிகரித்து குண்டான தோற்றத்துடன் இருந்தார். தற்போது மீண்டும் உடல் எடையை குறைப்பதற்காக தீவிர முயற்சியில் இறங்கி உள்ளார். இதற்காக யோகா மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
தற்போது ஸ்லிம்மான உடல் தோற்றம், நீளமான தலை முடியுடன் மிகவும் ஸ்டைலாக, வித்தியாசமான
கெட்டப்பில் மாறி உள்ளார். உடலை குறைப்பதற்காக அவர் மேற்கொண்ட பயிற்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சிம்பு ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
{{comments.comment}}