பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ..ஏ ஆர் முருகதாஸ் இணையும்.. சிக்கந்தர்!

Apr 11, 2024,03:09 PM IST

மும்பை: இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான், ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தின் பெயர் சிக்கந்தர் என்பதையும், இப்படம் ஈத் 2025 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்படுவதாகவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


ஏ ஆர் முருகதாஸ் இயக்கும்  புதுபடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு சிக்கந்தர் என பெயரிடப்பட்டுள்ளது. கஜினி உள்ளிட்ட 2 படங்களை இயக்கி பாலிவுட்டிலும் ஒரு மிகப்பெரிய வெற்றி  இயக்குனராக வலம் வந்தவர்  ஏ ஆர் முருகதாஸ். அதன் பிறகு அவர் இந்தியில் எந்த படமும் இயக்கவில்லை இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியில் படம் இயக்க களம் இறங்குகிறார் ஏ ஆர் முருகதாஸ். 


ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற பெயரில் உருவாகும் புது படத்தில் ஹீரோவாக கமிட்டாகி உள்ளார் நடிகர் சல்மான்கான். இப்படத்தை சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார்.




இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சல்மான்கானின் புது படங்கள் எதுவும் வெளிவரவில்லை. வழக்கமாக ஒவ்வொரு ரம்ஜான் பண்டிகை என்றும் சல்மான்கானின் புதிய படம் ரிலீஸ் ஆவது வழக்கம் இந்த முறை அது மிஸ் ஆகிவிட்டது. இருப்பினும் சல்மான் கான் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக அவரது புதிய படம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 


2025 ஆம் ஆண்டு அதாவது அடுத்த வருடம் ரம்ஜான் பண்டிகை அன்று தன்னுடைய புதுப்படம் சிக்கந்தர் ரிலீஸ் ஆக உள்ளதாக  அறிவித்துள்ளார் சல்மான்கான். இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அவர் சல்மான் கான் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாசுடன் தான் இணைந்து சிக்கந்தர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும்,இப்படம் அடுத்த வருடம் வெளியிட இருப்பதாகவும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் ஈத் முபாரக் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்