ஹைபர் லூப் பின்னணியில்.. "ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ்" .. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறு!

Mar 18, 2024,04:16 PM IST

சென்னை: படம் பேரு வித்தியாசமா இருக்கே‌ன்னு யோசிக்கிறீங்களா.. அட படமும்  அப்படி தானாம்.  வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறதாம்  ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ் (once upon a time in madras).


ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் தயாரிப்பில்  ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பாலா ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் சி ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தை பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் இசையமைத்துள்ளார்.




இப்படம் ஹைபர் லூப் பின்னணியில் திர்லராக, மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறதாம். மேலும் ஒருவர் கையில் கிடைக்கும் துப்பாக்கி நாலு வெவ்வேறு நபர்களிடம்  செல்லும்போது எப்படி அவர்கள் வாழ்க்கை மாறுகிறது என்பதை அரசியல் கலந்த கருத்துக்களைக் கொண்டு இப்படம் அமைக்கப்பட்டுள்ளதாம். 


இப்படத்தில் பரத், ஷான் மற்றும் ராஜாஜி ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். விருமாண்டி பட நாயகி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கனிகா, தலை வாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ் கல்கி, சையத் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.




சென்னையை மையமாக வைத்து இப்படத்தின் நகர்வு இருப்பதால் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது.  இப்படத்தின்  இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .விரைவில் இப்படம் திரைக்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்தைப் பற்றி இயக்குநர்  பிரசாத் முருகன் கூறுகையில்..




மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் ஹீரோ, சந்தர்ப்பம் தான் வில்லன். ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான். 


அப்படி  நான்கு பேர்  கைகளில் எதிர்பாராத விதமாக  ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கருத்தியல் அரசியலுடன், கமர்ஷியல் கலந்து பேசியுள்ளோம்.  


தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்தார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்