காவிரியில் தண்ணீர் இல்லை.. பேசித் தீர்க்க வேண்டும்.. சிவராஜ் குமார்

Sep 21, 2023,08:59 AM IST

பெங்களூரு: காவிரிப் பிரச்சினை தொடர்பாக இரு மாநிலத் தலைவர்களும் பேசீித் தீர்வு காண வேண்டும் என்று கன்னட நடிகர் சிவராஜ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.


காவிரியில் தண்ணீர் தர கர்நாடகா மறுத்து வருகிறது. எங்களிடம் தண்ணீர் இல்லை என்று அது கூறுகிறது. ஆனால் கர்நாடகத்திடம் போதிய அளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆனாலும் தர மாட்டேன் என்று மறுப்பதாக தமிழ்நாடு கூறி வருகிறது.




இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.  மத்திய அரசு, கர்நாடகம், காவிரி மேலாண்மை வாரியம் என அனைவருமே தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இல்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டில்தான் நமக்குத் தீர்வு கிடைக்கும்  என்று தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.


Video: சிவராஜ் குமார் கோரிக்கை


இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளுக்கு காவிரிதான் முதுகெலும்பு. விவசாயிகள் ஏற்கனவே போதுமான மழை இல்லாமல் சிரமத்தில் உள்ளனர். இரு மாநிலத் தலைவர்களும், கோர்ட்டும் அனைத்து நிலவரங்களையும் ஆராய்ந்து, உரிய சுமூகத் தீர்வைக் காண முயல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை: இதற்கிடையே, கர்நாடக அரசு தொடர்ந்துள்ள வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  காவிரியில் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க காவிரி நீர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. கர்நாடகத்தில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய அது கோரிக்கை விடுத்திருந்தது. அநத மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Fengal: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 11 மாவட்டங்கள்!

news

கனமழை எதிரொலி.. கடலோர மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்கவும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

புயல் எங்கு எப்போது கரையைக் கடக்கும்.. IMD சென்னை தலைவர் பாலச்சந்திரன் சொல்வது என்ன?

news

திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறில்லை.. அவரது எழுச்சி பிரமாதமாக இருக்கிறது.. நடிகர் பார்த்திபன்

news

Heavy rain alert.. சென்னையில் 8 ஆவின் பாலகங்கள்.. 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு!

news

Healthy Soups.. ஜிலுஜிலு மழைக்கேற்ற.. சூப்பரான கமகம வெஜிட்டபிள் சூப்.. செமையா இருக்கும்!

news

Cyclone Fengal.. நாளை உருவாகிறது புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்

news

அதே இடம்.. அதே புயல்.. OMG.. 99 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் Depression!

news

Chennai Rains.. சென்னையில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

அதிகம் பார்க்கும் செய்திகள்