சென்னை: ஜப்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வீடு, தனது சகோதரர் பிரபுவுக்கு சொந்தமானது. அந்த வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாததால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரராக கொண்டது ஈஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை தயாரிக்க தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனத்திடம் ரூ. 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் பெறப்பட்டிருந்தது.
இந்த கடன் தொகைக்கு 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. கடன் தொகையை திருப்பி தராததை முன்னிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். நீதிபதி டி. ரவீந்திரன் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும் படி கடந்த 2024ம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி, படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையாக முடியவில்லை என கூறப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. பல முறை அவகாசம் கேட்கப்பட்டதால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜப்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வீடு, தனது சகோதரர் பிரபுவுக்கு சொந்தமானது என்றும் அந்த வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாததால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
{{comments.comment}}