சென்னை : தனுசை தொடர்ந்து சந்திரமுகி படக்குழுவினரும் நடிகை நயன்தாரா மீது புதிய வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அத்தோடு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் அதை சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. உண்மையில் சந்திரமுகி படத்திலிருந்து சில காட்சிகளைப் பயன்படுத்த சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் எழுத்துப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.
நடிகை நயன்தாரா - டைரக்டர் விக்னேஷ் சிவனின் காதல் முதல் கல்யாணம் வரையிலான நிகழ்வுகள், Nayanthara - Beyond The Fairytale என்ற பெயரில் டாக்குமென்ட்ரியாக எடுக்கப்பட்டது. மெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த டாக்குமென்ட்ரியை தயாரித்து, தன்னுடைய ஓடிடி தளத்திலும் வெளியிட்டு லாபம் பார்த்து வருகிறது. இந்த டாக்குமென்ட்ரி வெளி வருவதற்கு முன்பே, நானும் ரெளடி தான் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த படத்தின் காட்சிகளை நயன்தாரா தரப்பு பயன்படுத்தியதாக தனுஷ் சட்ட நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரிய பரபரப்பை கிளப்பியது.
தனுஷ்- நயன்தாரா விவகாரம் கோர்ட் வரை சென்று, தற்போது வழக்கும் நடந்து வருகிறது இந்நிலையில் பிளாக்பஸ்டர் படமான சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நெட்பிளிக்ஸ் தயாரித்த டாக்குமென்ட்ரியில் நயன்தாரா தரப்பு பயன்படுத்தியதாக சந்திரமுகி பட தயாரிப்பாளர்கள் சார்பில் நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தங்களின் அனுமதி பெறாமல் பட காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்டஈடும் நயன்தாரா தர வேண்டும் என கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நயன்தாரா திருமணத்திற்கு முன் நடித்த பிளாக் பஸ்டர் படங்களின் கிளிப்ஸ் என்ற வகையில் சந்திரமுகி படத்தின் காட்சிகள் அந்த டாக்குமென்ட்ரியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சந்திரமுகி படத்தில் நயன்தாராவின் கேரக்டரும் முக்கியமாக பேசப்பட்டது. இந்த நிலையில் நயன்தாராவிடம் அப்படி எந்த நஷ்ட ஈட்டையும் கோரவில்லை. உண்மையில் வீடியோவைப் பயன்படுத்த முறைப்படி அனுமதி அளித்துள்ளோம் என்று சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் பட நிறுவனத்துக்கு சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆட்சேபனை இல்லை கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதியிட்ட இந்தக் கடிதத்தில் சிவாஜி பட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ராம்குமார் கணேசன் கையெழுத்திட்டுள்ளார். அதில் படத்தில் இடம் பெற்றுள்ள எந்தக் காட்சிகளையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். மொத்தம் 17 விநாடிக் காட்சிகளைப் பயன்படுத்த நயன்தாராவுக்கு, சிவாஜி பட நிறுவனம் அனுமதி கொடுத்துள்ளதாக அந்தக் கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஈரோடு கிழக்கு தொகுதி.. திமுகவுக்கா அல்லது காங்கிரசுக்கா? .. காத்திருக்கும் வி.சி. சந்திரகுமார்
அதிமுகவைப் பார்த்து நூறு சார் போட்டு கேள்விகள் கேட்க என்னால் முடியும்..முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
தண்டனை (சிறுகதை)
Gold rate.. கடந்த 3 நாட்களாக அமைதிகாத்த தங்கம் விலை... இன்று திடீர் உயர்வு...!
திமுக போராடினால் வழக்கு.. பாமக போராடினால் கைதா? .. ஆஹா.. நல்லா இருக்கே .. டாக்டர் அன்புமணி
ISRO.. கன்னியாகுமரியிலிருந்து.. இன்னொரு இஸ்ரோ தலைவர்.. யார் இந்த வி. நாராயணன்?
அண்ணாநகர் பாலியல் வழக்கு.. அதிமுக செயலாளர் அதிரடி கைது.. கட்டப் பஞ்சாயத்து செய்த கொடுமை!
இஸ்ரோவின் தலைவராக வி. நாராயணன்.. மகிழ்ச்சி தரும் செய்தி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 08, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}