காஷ்மீர் ஃபைல்ஸ் எடுத்த மாதிரி மணிப்பூர் ஃபைல்ஸ் படம் எடுங்க : சிவசேனா தாக்கு

Jul 23, 2023,02:58 PM IST

மும்பை : தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய படக்குழுவினர் மணிப்பூர் சம்பவத்தையும் மணிப்பூர் ஃபைல்சாக எடுக்கலாம் என மத்திய அரசை நேரடியாக விமர்சித்து சாம்னா பத்திரிக்கையில் கட்டுரை வெளியிட்டுள்ளது.


இந்த ஆண்டின் துவக்கத்தில் பாலிவுட் டைரக்டர் விக்வேக் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்று படம் ரிலீசானது. இதில் காஷ்மீரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றி விவரித்திருந்தனர். இந்த படம் தேசிய அளவில் அரசியல் ரீதியாக பெரும் விவாதித்திற்கு உள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக நாட்டையே உலுக்கிய மணிப்பூர் பற்றி சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 




அந்த கட்டுரையில், வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் வன்முறைகளும், அராஜகங்களும் காஷ்மீரையே மிஞ்சி விட்டன. சமீப காலமாக தஷ்கின்ட் ஃபைல்ஸ், தி கேரளா ஸ்டோரி, தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஆகிய படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளையும் கொடுமைகளையும் வைத்து மணிப்பூர் ஃபைல்ஸ் படத்தையும் எடுக்கிறார்கள்.


மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்து வரப்பட்ட சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிடவில்லை.  பிரதமர் மோடியும் அது பற்றி பேசவில்லை. இது 140 கோடி இந்தியர்களுக்கும் அவமானம். இதற்காக சட்டம் கொண்டு வரப்படும் என்கிறார் பிரதமர். அப்படி செய்தவர்களுக்கு தண்டனை ஏதும் கிடையாது.


மணிப்பூர் சம்பவத்திற்கு அந்த மாநிலம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதே காரணம். மணிப்பூரில் 60,000 துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  அப்படியானால் அங்கு நிலைமை பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் கையை மீறி போய் விட்டது என்று தான் அர்த்தம் என  மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்