மகள் திருமணம் முடிந்த 4 நாட்களிலேயே.. சத்ருகன் சின்ஹா வீட்டில் இப்படி ஒரு சம்பவமா?

Jul 01, 2024,11:13 AM IST

மும்பை : நடிகர் சத்ருகன் சிஹாவின் மகளும், பிரபல நடிகையுமான சோனாக்ஷி சின்ஹாவிற்கு திருமணம் முடிந்து நான்கு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் அவர்களின் வீட்டில் நடந்துள்ள சம்பவம் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரையும் பதற்றமடைய வைத்துள்ளது.


சத்ருகன் சின்ஹா, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தான் அனைவரின் பதற்றத்திற்கும் தற்போது காரணமாக அமைந்துள்ளது. மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்ருகன் சின்ஹா, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம். தற்போது அவருக்கு என்ன நடந்தது என்ற உண்மை காரணம் வெளியாகி உள்ளது.




கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடிகர் சத்ருகன் சின்ஹா, தன்னுடைய வீட்டின் டைனிங் டேபிளில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அவருக்கு பிடித்தமான இடம் இது தானாம். அவரது பெரும்பாலான பேட்டிகளும் இந்த இடத்தில் அமர்ந்து தான் கொடுத்திருப்பார். அப்படி அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அருகில் புதிதாக திருமணமான மகள் சோனாக்ஷி சின்ஹாவும் இருந்துள்ளார். 


நன்றாக பேசிக் கொண்டிருந்த சத்ருகன் சின்ஹாவிற்கு திடீரென விலா எலும்பு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தடுமாறிய அவரை அருகில் இருந்த சோனாக்ஷி சின்ஹா தாங்கி பிடித்துள்ளார். உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, அவரை பரிசோதனை செய்து, ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர். இருந்தாலும் சத்ருகன் சின்ஹாவிற்கு தொடர்ந்து வலி இருந்து வந்துள்ளது. மறுநாள் காலை வரை அவருக்கு வலி குறையாமல் இருந்ததால் டாக்டர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்.


சத்ருகன் சின்ஹாவிற்கு உள்ளுறுப்புகளில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அனைத்து டெஸ்ட்களும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால்  டாக்டர்கள் சந்தேகப்பட்டது போல் அவருக்கு உள்ளுறுப்பு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என கண்டறியப்பட்டது. இதனையடுத்து இன்று (ஜூலை 01)மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. சத்ருகன் சின்ஹா தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்