காதலனுக்கு விஷம் கொடுத்த வழக்கில்.. காதலிக்கு மரண தண்டனை.. கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Jan 20, 2025,07:08 PM IST

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பாறசாலை பகுதியில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி க்ரிஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்பட்டிங்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ். 23 வயதான இவர் நெய்யூர் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய க்ரீஷ்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் காதல் மலர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ஷாரோன்ராஜூக்கு திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.அவருக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் 11 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஷாரோன்ராஜ் இறந்தார்.




ஷாரோன்ராஜ் இறப்பில் சந்தேகம் ஏற்றபட்ட நிலையில், ஷாரோன்ராஜ் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து ஷாரோன்ராஜ் காதலி மீதும் சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.அதன்பின்னர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு திருவனந்தபுரும் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் காதலி க்ரீஷ்மாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில் ஷாரோன்ராஜூற்கு விஷம் கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.


காதலி க்ரீஷ்மாவிற்கு அவரது பெற்றோர் ராணுவ வீரர் ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த க்ரீஷ்மா பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை காதலன் ஷாரோன்ராஜூடம் தெரிவித்துள்ளார் க்ரீஷ்மா. இதற்கு ஷாரோன்ராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், தனது திருமணத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிடுமோ என்று எண்ணிய க்ரீஷ்மா, காதலன் ஷாரோன்ராஜூக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் க்ரீஷ்மா, அவரது தாய் மற்றும் தாய்மாமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நெய்யாற்றின் கரை கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இன்று ஷாரோன்ராஜ் காதலி க்ரீஷ்மாவிற்கு மரண தண்டைன விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் மாமான் நிர்மல்குமாருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தாய் சிந்துவை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெரியார் குறித்துக் கேட்ட வாக்காளர்.. ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி அளித்த பதில்!

news

சபாநாயகர் அப்பாவு சொன்ன ஞானசேகரன் இவர்தான்.. பத்திரிகையாளர் நிரஞ்சன்குமார் தரும் விளக்கம்!

news

இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில்.. பிப்ரவரி 5 பொது விடுமுறை அறிவிப்பு

news

திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி.. பட்டையைக் கிளப்ப வரும் இசைஞானி.. ரசிகர்களே ரெடியா?

news

அன்னா ஹசாரே போல.. உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்?.. அமைச்சர் பி.கே. சேகர்பாபு கேள்வி

news

நெகிழியின் கண்ணீர் (கவிதை)

news

Cooking Tips.. மட்டன் சிக்கன் குழம்புக்கு டஃப் கொடுக்கும் பட்டன் காளான் பட்டாணி குழம்பு!

news

சிவகங்கை மாவட்டத்தில்.. இன்றும் நாளையும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு!

news

வாரிசு, கேம்சேஞ்சர் பட தயாரிப்பாளர்.. தில் ராஜு வீட்டில்.. வருமானவரித்துறை திடீர் சோதனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்